வியாழன், 22 நவம்பர், 2018

சீதக்காதி (1)

சீதக்காதி (1)
=======================================ருத்ரா

சமாதியைப்பிளந்து
மோதிரவிரல் நீட்டி
புலவருக்கு
கொடை அளித்த கதை
அஞ்சாப்புவில
படிச்சது ஞாபகம் வருது.
ஆனா "அய்யா" செட்ட‌ப்பில்
அடங்காத புயல் ஒன்று
வரப்போகுது.
இந்தியன் தாத்தா மாதிரி
கங்கு விழிகள்
தெரிகின்றன.
பொறி பறக்கிறதைப்பார்த்தால்
கொதிக்கிற தீக்குழம்பு
சூரியனை "வச்சே"குருமா
வச்சுடுவார் போலிருக்கிறது.
மீசைக்காற்றிலும்
புல்லாங்குழலின்
தேனிசை தரும் முகம்
அவருக்கு இருப்பதாய்
பாடல்வரிகள்
அற்புதம் செய்கின்றன.
அந்த நாற்காலியில்
வில் அம்புடன் இருப்பதைப்பார்த்தால்
ஒரு குருட்சேத்திரக்களம்
அடைகாத்துக்கொண்டிருக்கிறது
எனலாமோ?
படம் வந்தால் தெரியும்.
அண்ட்ராய்டு யுகப்படங்கள்
ஆறேழு தினங்கள் ஓடினாலே
அது கலைத்திரையில்
கொப்பளிக்கும் சுநாமிகள் தான்.
இப்போதெல்லாம்
கோடம்பாக்கம்
படம் வந்த சுவடு தெரியாமலேயே
ஓடிவிடும்
ஓடம்பாக்கமாக பரிணாமம்
அடைந்து வருகிறது.
நூறு நாள் ..வெள்ளிவிழா
என்றெல்லாம்
"பெஞ்ச்"தேய்க்கும்
ரசிகர்கள் தலைமுறை அல்ல
தற்போதைய தலைமுறை.
"நேனோ" செகண்டுகளில்
சமுதாயக்காட்சிகளையே
தடம் மாற்ற த்துடிக்கும்
சிந்தனைப் படைகளாக
இருக்கிறார்கள்
இன்றைய திரைப் படைப்பாளிகள்.
இதற்கு மூல விதை
ஊன்றியவர்களில்
மிகவும் முக்கியமானவர் அல்லவா
விஜய சேதுபதி.
"சீதக்காதி " அவருக்கு
எத்தனை கோணங்கள் காட்ட
சவால் விடுகிறதோ தெரியவில்லை.
அவர்
அத்தனையிலும் வைரப்பட்டை தீட்டி
ஒரு "கலை"டோஸ்கோப்  காட்டுவார்
என்பது நிச்சயத்திலும் நிச்சயம்.

===========================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக