வியாழன், 1 நவம்பர், 2018

தீபாவளிக்குறும்பாக்கள்

தீபாவளிக்குறும்பாக்கள்
==============================================ருத்ரா

பட்டாசு

சீனா எனும் நரகாசுரனை
சீனப்பட்டாசு கொண்டு வெடித்தால்
வதம் அடைவது
இந்தியாவா? சீனாவா?

_______________________________________________(1)

ர‌ஃபேல்

ராகுல் என்றால்
ர‌ஃபேல் என்றே
அர்த்தம்.

_________________________________________________(2)


தேர்தல்

எல்லோரும் இந்நாட்டு
(புன்னகை)
மன்னர்கள் தான்.


______________________________________________________(3)


ஸ்டாலின்

கருத்துக்கணிப்புகளின்
ரத்னக்கம்பளம் இவருக்கு
கரன்சிக்கம்பளம் யாருக்கு?

____________________________________________________(4)


டிடிவி

அவர் இன்னும்
முழம்போடவும் இல்லை.
அவர் கை
வெறுங்கையும் இல்லை.


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________________(5)


ரஜனி கமல் கூட்டணி


"பஞ்சாப சிந்து குஜராத்து மராட்டா"
..................
கீதத்தில் அடுத்த சொல்
கூடாது என்பதற்கே கூட்டணி.

_______________________________________________(6)

பி.ஜே.பி


கூட்டணி பேச்சு வார்த்தையில்
இவர்களுக்கு விசேஷ அழைப்புகள்:
அருள்மிகு ஐயப்பன்.
அருள்மிகு ஆண்டாள்.

______________________________________________(7)

ராஜபக்ஷே


கருவி தான் இவர்.
ஆனால் கீ கொடுக்கும் கருவி...
பொம்மைகள் காங்கிரசும் பிஜேபியும்.

__________________________________________________(8)


தமிழ்

தீப்பற்றி எரிகிறது.
பீடிக்கு நெருப்பு கேட்பது
டெல்லி.


_____________________________________________________(9)


வல்லபாய் படேலின் சிலை.


இந்திய ஒற்றுமையின் "விஸ்வரூபம்."
இதிலும் ஒரு "குருஷேத்திரம்" 
நடக்காமல் இருக்கவேண்டும்.


-------------------------------------------------------------------------------(10)
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக