ஞாயிறு, 18 நவம்பர், 2018

நிஜமாய் ஒரு சூப்பர்ஸ்டார்


நன்றி "ஒன் இந்தியா தமிழ்"
https://tamil.oneindia.com/news/nagapattinam/chennai-murugan-involved-eb-post-rectifying-process-334426.html

நிஜமாய் ஒரு சூப்பர்ஸ்டார்
===================================================ருத்ரா

நாகப்பட்டினத்தை
நார் நாராய் கிழித்தது
அந்த "கஜா"
மின்கம்பங்கள் அந்த
யானையின் தும்பிக்கையால்
வளைத்து முறுக்கப்பட்டன.
அன்பான அந்த முருகன்
சூரசம்ஹாரம் முடித்த கையோடு
இங்கே
எல்லா கிராமங்களுக்கும்
உயிரொளி வழங்க
மின் கம்பம் ஏறி நிற்கிறார்.

சூப்பர் ஸ்டார் அவர்களே !
நீங்கள்
சிகரெட்டுகளை
தூக்கியெறிந்து
வாயில் கவ்வி
சாகசங்கள் புரியவேண்டாம்.
தரையில்
நெருப்புப்பொறி பறக்க
இசைக்கருவிகள்
காது கிழிக்க
குரல் கொடுத்துக்கொண்டு
வரவேண்டாம்.
கிராஃபிக்சிங்
பொய் நிழல்களில்
எங்கள் கண்களை
கட்டிப்போடவேண்டாம்.
நாகையில்
மின் நரம்பு அறுந்து போன
அந்த இருட்காட்டுக்கு
ஒளியேற்றுங்கள்.
உங்கள் பணிக்கு
எங்கள்
பாராட்டுக்கள்!
பாராட்டுக்கள்!
பாராட்டுக்கள்!

=====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக