புதன், 14 நவம்பர், 2018

வாயசைப்பு "மன்னன்" ரஜனி


வாயசைப்பு "மன்னன்" ரஜனி
==============================================ருத்ரா


மன்னன் படத்தில்
ரஜனியும் கவுண்டமணியும்
தியேட்டரில் டிக்கட் எடுக்கும் காட்சி
எல்லோரையும் குலுங்க குலுங்க‌
விலா நோக சிரிக்க வைக்கும்.
ரஜனியின் நகைச்சுவையில்
அப்பட்டமான அப்பாவித்தனமும்
குழந்தைத்தனமும் இருக்கும்.
பார்ப்போர் உள்ளங்களை
குழைவிக்கும் தன்மை
அந்த சிரிப்பெல்லாம் விரவி நிற்கும்.
ஆனால்
அரசியலில் அந்த "மன்னன்"
செய்யும் காமெடிகள்
நம்மை சிரிக்க வைக்கவில்லை.
நம்மை சிந்திக்கவே வைக்கின்றன.
"ஆபத்தான கட்சியா அது?"
என்று கேள்விகளை வீசினார்கள்
ஊடகத்தார்கள்.
ஆபத்தானவர் தான்.
ஆனால் மோடியில்லை, ரஜனி!
சிகரெட்டுகளை
வானத்திலிருந்து வாய்க்கு கவ்விபிடிக்கும்
அவர் மேனரிசம்
எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் வார்த்தைகளை வைத்து
அவர் சர்க்கஸ் செய்யும்
மோடி வித்தையில்
பொம்மலாட்டம் போல்
நடந்து கொள்வது
தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும்
மிகவும் ஆபத்து.
தமிழ் எங்கள் உயிர்.
திராவிடம் அதன் ஒளி.
இவற்றை அழிக்கும் குரல்களுக்கு
"வாயசைப்பு தான்"
அவர் அறிக்கைகள்.
"அப்படியா கேள்விகளை வீசுவது?
அவர் உள்வாங்கிக்கொள்ள வில்லையே .
மீண்டும்
அக்கேள்விகளை கேட்டுப்பாருங்கள்"
என்று அவர் சொல்ல
அந்த இசை அமைப்புக்கேற்றாற் போல்
இவர் சுருதியை மாற்றியது
இன்னும் திடுக்கிடும் அறிவிப்பையும்
வெளியிட்டது எல்லாம்
நம் தமிழுக்கு இசை சேர்ப்பது அல்ல.
தமிழ் இனம் எதற்கோ இரையாகப்போவதை
உணர்த்தும் சொற்கள் அவை!
மோடி ஒருவர் தான்.
எதிர்ப்பவர்கள் பத்து பேர்.
அதனால் யார் பலசாலி?
என்ற பஞ்ச்  டையலாக் தான்
அவர் தமிழர்களை
நோக்கி வீசும் சொற்கள்.
ஆட்சிக்கட்டிலில் ஆட்டுக்குட்டி
உட்கார்ந்திருந்தாலும்
அது "புலி மாமிசம்" கேட்கும்!
ஆட்சி எந்திரங்கள் யாவையும்
கையில் வைத்துக்கொண்டு
சிறுபான்மை மதத்தை..
சிறுபான்மை தாழ்த்தப்பட்ட சாதியினரை..
நோக்கித் தாக்க‌
"உங்களை சக்கையாக பிழிவேன்"
என்று வீரம் காட்டும் குரல்களே
இவருக்கு பலம் வாய்ந்ததாக‌
தெரிகிறது என்றால்
இவரை நோக்கியும் "சில ஃபைல்கள்"
நகரும் என்பதே அர்த்தம்.
"என் வியர்வைத்துளி ஒவ்வொன்றுக்கும்
ஒரு முத்திரை பவுன் தங்கம்
கொடுக்கும் தமிழ்நாட்டு ரசிகர்களே"
என்று நன்றி காட்டத்துடித்தவர்
இப்படி "பலசாலி" வசனம் மூலம்
பயமுறுத்தல் எனும் மொழியில்
தமிழ் மக்களை தமிழ் மொழியை
குழி தோண்டிப்புதைக்கத் துடிக்கலாமா?
மக்கள் தீர்ப்பு காட்டும் என்று
மத்தாப்புகள் கொளுத்தினாலும்
அவர் உட்கிடக்கை நன்கு புரிந்தது.
மத்திய அரசு எனும் ரோடு ரோலருக்குள்
தமிழ் மக்களின் கனவுகளை
நசுக்குவதே அது.
ரஜனி அவர்களே
நீங்கள்
ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்
என்று முழங்கிய
அந்த "ஆண்டவர்களே"
காப்பாற்றப்பட முடியாமல்
ஒரு போலி மதவெறிக்குள்
புதைந்து கிடப்பது
உங்களுக்கு புரியுமா? புரியாதா?
எங்களுக்கு புரியவில்லை உங்கள் பேச்சு...
அன்பான ரஜனி அவர்களே!

==============================================================









2 கருத்துகள்:

வருண் சொன்னது…

நீங்களும் வேலூர் ராமன் அங்கிள் லிஸ்ட்ல சேர்ந்துட்டீங்க போலனுங்க பதிவுகளில் "ரஜினி", "ரஜனி" ஆனது பெரிய முன்னேற்றம்தான்.

He has been consistent when it comes to Modi. He always supports him. Does it mean he is a "hindu fanatic"? Idk! What do you say, uncle?

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

Rajani is a wonderful man.If he helps Tamil Nadu's development in real and rational sense it is the most welcome aspect.

கருத்துரையிடுக