செவ்வாய், 6 நவம்பர், 2018

விஜய் எனும் பிரளயம்.

விஜய் எனும் பிரளயம்.
===============================================ருத்ரா

விஜய்யின்
சர்கார் பட அலைகள்
ஆயிரம் இமயங்களை விழுங்கி
ஆர்ப்பரிக்கின்றன.
இவரிடமிருந்து
வருங்கால சினிமா
எத்தனை
ரஜனிகளை வேண்டுமானாலும்
தோண்டி எடுக்கலாம்.
மாஸ் சினிமாவின்
கிம்பர்லீ சுரங்கம் விஜய்.
அந்த கள்ள ஒட்டு எனும்
ஒற்றைவரி
இயக்குனர் புயல் முருகதாசுக்கு
வெறும் துரும்பு.
இந்த துரும்பைக்கொண்டு
மதிப்பிற்குரிய அந்த எழுத்தாளர்
அந்த பிரம்மாக்களையே அசைத்துவிடும்
ஒரு திரைப்படைப்பை
இவர் தந்தது போல்
அவர் தந்து விடமுடியுமா?
இருப்பினும் கொடுக்கவேண்டிய‌
சிம்மாசனம்
அவருக்கு தரப்பட்டது
முருகதாசு அவர்களின்
முதிர்ச்சியை காட்டுகிறது.
சினிமாக்கதைகளுக்கு
நதி மூலம் ரிஷி மூலம் பார்ப்பது
யாரோ எப்போதோ
கடலில் கரைத்த பெருங்காயத்துக்கு
காப்புரிமை கேட்பது போல் தான்.
உண்மையான மூலக்கதை
நம் "வாக்காளர் பட்டியல் தான்"
இறந்தவர் உயிர்ப்பதும்
உயிர்த்தவர் இறப்பதும்
அங்கு தானே!
விஜய் அவர்களின் நடிப்பு
வெறும் மசாலாத்தனம் இல்லை.
அவரின் ஒவ்வொரு மேனரிசமும்
நம் ஜனநாயகத்தின்
இருட்டு மூலைகளை
தகர்த்து எறியும் வீச்சாக
வெளிப்படுகிறது.
ஓட்டு போடும் கைகளின் ஒவ்வொரு
பச்சை நரம்பும்
சிவப்பு யாழில் எரிமலைகளை
மீட்டும்.
அங்கே இங்கே
சில தொய்வுகள் இருந்தபோதும்
மொத்தமாய்
ஒரு எழுச்சி இங்கே
பிடறி சிலிர்த்து நிற்கிறது.
கார்பரேட் எனும் கோட்டு சூட்டுக்குள்
பச்சைக்கசாப்பு கத்திகள்
செருகப்பட்டிருப்பதே
நம் சமூக பொருளாதாரம்
எனும்
மிகக்கசப்பான உண்மை
நம் முகத்தில் காறி உமிழ்கிறது.
இதை எடுத்துக்காட்டும்
விஜய்
ஒரு தளபதி அல்ல..
தளபதி தளபதி தளபதி....
ஆம்...
நூறு தளபதி!

===================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக