சனி, 24 நவம்பர், 2018

தூரிகைகள்





தூரிகைகள்

========================================ருத்ரா


தூரிகை எதுவாயினும்

உள்ளம் எதுவாயினும்

ஆத்மா எனும்

உள்ளத்தின் உள்ளமும்

எந்தக்கடலின் திவலைகளாய்

இருந்த போதிலும்

அது குமிழ்த்தது என்ன?

அது சுழித்தது என்ன?

அது

இந்த பிரபஞ்சத்தை

கிள்ளிப்பார்த்துக்கொண்டே இருக்கிறது

அதாவது

அது தன் படைப்புத்தொழிலை விட்டு

தூங்கி விட்டதா என்று.

கண்களில் எல்லாம் தீப்பற்றிக்கொண்டு

கனவுகளில் எல்லாம்

அந்த பிரபஞ்சத்தையே

அப்பிக்கொண்டு

உரு சமைக்கிறது!

அந்த உரு யாவருக்கும் பொது!

அந்த உருவே எல்லா உருவையும்

தன் கைப்பிண்டமாய் படைக்கிறது!

காரணமாயும் பூரணமாயும்

காரமாயும் இனிப்பாகவும்

அது நம்முள் உருப்பிடிக்கிறது.

ஏன் நம் கணினிகளுக்கு கூட‌

தன் சுண்டெலியையைத்தான்

கொடுத்திருக்கிறது.

குத்தகையாய்!

அதற்கும் மேலும்

நீ சிங்கத்தலையில் தும்பிக்கை வைத்த‌

யாளியாய்

வலம் வந்து பார்!

முக்கொம்பனாய்  கோரைப்பல் விரித்த‌

ட்ரை செராப்டஸ் டைனோசார் ஆகவும்

ஒரு காட்டையே அடைத்துக்கொண்டு

கர்ஜித்து கலகம் செய்.

மனிதனுக்கு மட்டும் அல்ல‌

பரிணாமம்.

கடவுளுக்கும் உண்டு

பரிணாமம்.

சாணிப்பிள்ளையாரில் ஆரம்பித்து

மார்பிள் மற்றும்

பஞ்சலோகங்களில்

ஆறு தலை பன்னிரெண்டு கையிலும்

உருக்கொண்டு

கரு விளையாடல் புரியும்.

கனவு நனவு அவியல் குழம்புகளில்

வண்ணம் எடுத்து தொடுத்துப்பார்.

மனத்துக்கு மிக மிக மகிழ்ச்சி.

இது எல்லாமே விளையாட்டு தான்.

துப்பாக்கிகளையெல்லாம்

முறித்துப்போட்டு விடுங்கள்.

புறாக்கள் அன்பின் அமைதிக்கு

சிறகடிக்கும் கீற்றுகளை

உங்கள் தூரிகை கொண்டு

உயிர்ப்பித்துக் கொண்டே இருங்கள்.


=============================================
17.09.2015










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக