சனி, 17 நவம்பர், 2018

காற்றின் மொழி "ஜோதிகா"

காற்றின் மொழி "ஜோதிகா"
========================================================ருத்ரா

"குஷி"யில்
மையம் கொண்ட புயல்
கரையைக்கடக்க‌
இத்தனை நீள‌
கோடம்பாக்க விரிகுடாவா
வேண்டியிருக்கிறது?
இடையில்
எத்தனை எத்தனைச்சுழிகளை
பூவென்று ஊதியிருக்கிறார்.
ஜோதிகாவின்
முக வனத்திலேயே
ஆயிரம் மத்தாப்புகள்
அதிசயம் காட்டும்.
திடீரென்று
அந்த கண்களில்
எத்தனையோ
பெர்முடா முக்கோணங்கள்
யாவற்றையும் கவிழ்த்து விடும்.
அந்த செல்லச்சிணுங்கலிலும்
சீறும் சிங்கங்கள் படுத்திருக்கும்.
அதில் அவ்வப்போது
ஒவ்வொன்றாக‌
அவிழ்த்து விட்டு
நமக்கு சர்க்கஸ் காட்டுவார்
நடிப்பின் இளஞ்சிங்கம் "சூர்யா"
ஒரு வெட்டு.
ஒரு சிலிர்ப்பு
ஒரு சுழிப்பு
ஒரு இனிப்பு
என்று
எத்தனை நரம்புப்பின்னல்களின்
வண்ண ரங்கோலியில்
தன் முகப்பூங்காவை
காஷ்மீர்த் தோட்டங்கள்
ஆக்கியிருக்கிறார்.
முப்பத்தாறு வயது பற்றிய படத்திலும்
முத்துகளை அமைதிப்பரல்களாக்கி
முட்டி நிற்கும் கண்ணீருக்குள்
உணர்ச்சி லேசர்களின் எத்தனை
பிம்பங்களை காட்டியிருக்கிறார்!
எந்தப்படத்தில் எந்தப்பாத்திரத்தில்
என்றெல்லாம்
பார்த்துக்கொண்டு
வருவதிலை இவர் நடிப்பு.
விளம்பரப்படங்கள் கூட‌
விருதுக்கு தகுதிதான்.
இப்போது
காற்றின் மொழிக்கு வருவோம்.
அந்த "கஜாவை"ப்பற்றி
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
கஜா என்றால்
வேதாரண்யத்தில்
நாம் பார்த்த துஷ்டத்தனம் அல்ல.
குட்டியானையின் குறும்புத்தனம்
டிவிக்களில்
எத்தனை பார்த்திருக்கிறோம்.
அத்தனை
குறும்புத்தனத்துக்கும்
கரும்புத்தனத்துக்கும்
மொத்த குத்தகை
எடுத்திருக்கும் நேர்த்தியே
இவரது நடிப்பின் மொழி.

(தொடரும்)










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக