வெள்ளி, 16 நவம்பர், 2018

மாற்றி யோசி.




மாற்றி யோசி.
====================================ருத்ரா

பூக்களையும் பட்டாம்பூச்சிகளையும்
வைத்து
காதல் செய்பவர்களே!
நீங்கள் உடைத்துக்கொண்டுவந்த‌
அந்த "கோக்கூன்" எனும்
குடும்பத்தின் புழுக்கூட்டைப்
பற்றி கொஞ்சம் யோசியுங்கள்.
உங்கள் தாயின் கருவறை
ரத்தநாளங்களின் ரங்கோலிகளால்
கோலம் இடப்பட்டது
உங்களை பிரசவிக்கையில்.
உங்கள் தந்தையின் கனவுமண்டலங்கள்
எல்லாம்
உங்கள் வெற்றிக்கோபுரங்களை
கட்டி கட்டி நிமிர்த்திக்கொண்டே இருக்கின்றன.
உங்கள் காதலுக்கு
அவர்கள் அரக்கர்கள் அல்ல.
உன் காதலியிடமிருந்து
ஒரு "ஐ லவ் யூ" சொல் வாங்க‌
உனக்கு எத்தனை குருட்சேத்திரங்கள்
வேண்டியிருக்கின்றன.
அந்த காயங்களோடு காயமாக‌
இந்த புண்ணையும் ஏந்தி
உங்கள் பெற்றோரையையும் வைத்துக்
கொண்டு
அந்த வேலன்டைன் வண்ணப்புறாக்களை
பறக்க விடுங்களேன்.
இதயங்கள் என்றால்
அது அன்பு மனங்களின் பூங்கா தான்.
ஒரு இதயக்கூட்டிலிருந்து
பறக்கும் குஞ்சுகளே
அந்தக் கூட்டை
சின்னா பின்னமாக்கிவிட்டு
கட்டும் உங்கள் கோக்கூன்கள்
ஆயிரம் பசிபிக் கடலின்
கண்ணீர்க்கொத்துக்களைக்கொண்டு
மிடையப்பட்டதாகும்.
மெல்லிய காதலின் மனப்பரப்பில்
ஒரு "கஜா"புயல் நுழைந்து
துன்ப வடிவங்களின்
எலும்புக்கூடுகள் நொறுங்கிக்கிடக்கும்
சின்னாபின்னங்களாக
ஆக்கிவிடப்போகும் அபாயங்களும்
அந்த மெகந்திக்கனவுகளில்
விரவிக்கிடப்பதை
அறிவீர்களா!
இன்பமுடன் காதல் செய்யும்
இளஞ்சிட்டுளே.
ஆயினும்
தாய் தந்தையரின் கசங்கிப்போன‌
அந்த மனங்களையா
உங்கள் காதல் கடிதங்களை எழுத‌
தேர்ந்தெடுப்பீர்?
காதலியுங்கள்.
காதலையும் "மாற்றி யோசித்து"
காதலியுங்கள்.

===============================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக