செவ்வாய், 13 நவம்பர், 2018

ரஜனியும் மைக்குகளும்

ரஜனியும் மைக்குகளும்
=====================================ருத்ரா
( ஒரு கற்பனை பிரஸ் மீட் )




"யார் அந்த ஏழுபேர்"னு சொன்னீங்களோ
இப்ப இந்த எழுபேரும் யார்ன்னு புரிஞ்சிருப்பீங்க"

"எந்த இந்த ஏழு பேர்னு சொல்றீங்க?"

"அதாங்க ..யார் அந்த ஏழுபேருன்னு கேட்டதுல உள்ள ஏழுபேருங்க"

"எந்த யார் அந்த ஏழுபேர்னு கேட்டீங்க?"

"யார் அந்த ஏழுபேர்னு தானே இந்த ஏழுபேர் பத்தி நாம பேசுறோம்."

"இந்த ஏழுபேர்ல  எந்த அந்த ஏழுபேர்னு சொல்றீங்க.."

"அதே அந்த ஏழு பேர் தாங்க."

"ஓ அந்த ஏழு பேரா..நான் இந்த ஏழுபேருன்னுல்லா நெனச்சிக்கிட்டேன்.."

இப்ப ஏழு பேரைத் தெரிஞ்சுக்கிட்டீங்க.."

"ஆமாம். அந்த ஏழு பேர் தான் இந்த அந்த ஏழு பேர்ன்னு..."

"சரிங்க இப்ப புரிஞ்சுகிட்டோங்க"

"அப்ப யார் அந்த ஏழுபேர்னு   கேட்டேனோ  அது தான் இப்ப  இந்த ஏழுபேர்னு..."

"அய்யோ! போதுங்க! வரோமுங்க"

"அப்ப போய்ட்டு வரீங்கன்னு சொல்றீங்க..யார் எப்ப எந்த ஏழுபேர்னு...."

"வர்ரோங்க உங்க தெளிவான அறிக்கைக்கு நன்றி...மீண்டும் மீண்டும் நன்றி
வர்ரோங்க..."


=================================================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக