ஞாயிறு, 4 நவம்பர், 2018

எதிரொலிகள்

முகமுடிகளின் காட்டில் 

ஓ! மனிதா!

எங்கே நீ தொலைந்து போனாய்?உன்னைத்தேடிய 

குரல்களின் 

எதிரொலிகள் இவை.


எதிரொலிகள் 

=======================================ருத்ராதீபாவளிநரகாசுரன் பிறந்து

நரகாசுரன் இறந்து மீண்டும்

நரகாசுரன் பிறக்கும்

திருநாள்.லெட்சுமி வெடிலெட்சுமிக்கு வெடியா?

பிடி வாரண்டுகளும்

ரெடி.தள்ளுபடிஜனநாயகம் தள்ளுபடி

செய்யப்பட்ட்டு விற்கப்படும்

தேர்தல்கள் தயார்.பட்டாசுக்கு வழக்குபாவம்

இந்த மழலைகள் மீதா

விலங்குகள் "வெடி".தீயணைப்புப்படைஉங்கள் ஓட்டுப்பெட்டிக்குள்

நடக்கும்  விபத்துக்களுக்கு மட்டும்

நாங்கள் பொறுப்பல்ல.ஆர்பிஐ


இப்போது தான் தெரிந்தது

வெறும் காகிதங்களின்

"மார்ச்சுவரி" என்று.ர‌ஃபேல்


அம்பானிகளின்

சட்டைப்பாக்கெட்டில்

இந்திய இறையாண்மை.சர்கார்


கதை திருடு இருக்கட்டும்

சர்"க்"காரில் உள்ள‌

ஒற்றெழுத்துக்களை

திருடியது யார்?அஜித்


நாளைய முதலமைச்சர் எனும்

"பச்சை குத்தப்படாத"

பச்சை நடிகர் இவர்.மோடி


உலகத்திலேயே உயரமான‌

சிலை அமைத்த‌

இன்னொரு சிலை.
சுப்பிரமணியம் சுவாமி ராஜபக்ஷேயின் அலங்கார 

போன்சாய் மரம்

இந்திய அரசியலின்

சாணக்கிய மேஜையில்.

ஹெச்.ராஜா


பிரம்மனுக்கு மட்டும் அல்ல‌

இவருக்கும் நாலு தலை.

மூணு அறிக்கைக்கு

ஒண்ணு மறுப்புக்கு.வைரமுத்து


பிரபலம் எனும் வேட்டைக்காட்டில்

இவருக்கு விழுந்து அம்பு

முதுகிலா? மார்பிலா?மி டூ


பெண்களின் பல்லாங்குழி

விளையாட்டு தான்.

சோழிகளுக்குப் பதில்

துப்பாக்கிக்குண்டுகள்.வி டூ


பதிலுக்குப் பதிலா இது?

வெறும்

"நலுங்கு" விளையாட்டு இது.தீபாவளி விற்பனை


இந்தியாவின் 

மொத்தமக்கள் தொகையும்

விளம்பரங்களால்

கசக்கிப்பிழியப்படும் "லாபச்சாறு".

ஊழல்வழக்குகள்


ஆண்டு தோறும் கொசுக்கள் வரும்.

ஆண்டு தோறும் மருந்தடிப்போம்.

கொசு மீது அல்ல.மக்கள் மீது.நீரவ் மோடி


நம் சட்டங்களின் ஓட்டை

இத்தனை பெரிதா?

நம் வங்கிகள் எல்லாம் இவருக்கு

வெறும் நொறுக்குத்தீனி.ராமர் கோயில்


கோயில் ராமருக்கு அல்ல.

ஜனநாயகச் சீதைக்கு மட்டுமே

தீக்குளிக்க.பாபர் மசூதி


பள்ளி வாசல் மீது கடப்பாரைகள்.

பள்ளிகொண்ட பெருமாள் மார்பில்

ரத்தம். ரத்தம்.ரத்தம்.கமல்


இப்போது தெரிகிறது

ரம்மி ஆடுகிறார் என்று.

இந்த "வேட்டையாடு விளையாடு"

எல்லாம் "செட்" சேரவே.ரஜனி


360 டிகிரிகளிலும் துப்பாக்கிகளின்

வட்டம்  இந்த "எந்திரனுக்கு".

ஒன்றிலாவது புல்லட் உண்டா?


=========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக