"தாட் மொமெண்டம்"
__________________________________________
அன்றைய ஈடன் தோட்டத்து
ஆப்பிள்
மிரட்டும் மலைப்பாம்புகளையும்
மீறி
ஒரு பரிணாமவெளிச்சம்
காட்டியதில்
மனிதனின் அறிவு
மெல்ல மெல்ல
ஆயிரம் சூரியன்களை
பூக்கத்துவங்கின.
இன்று மனிதனின் விஞ்ஞானம்
அந்த விஞ்ஞானத்துள்
ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்களை
குஞ்சு பொரிக்கத்துவங்கி விட்டன.
இனி
எல்லா பிரபஞ்சத்தையும்
"எ ஐ"யினால்
கடைந்து அந்த
பாற்கடலில் திரண்ட
மனித மூளையை
எங்கோ ஒரு "கைப்பிடிக்குள்"
வைத்துக்கொண்டு
மொத்த உலகத்தின்
துடிப்புகளை
நகர்வுகளை
வெறும் சதுரங்கக்காய்கள் ஆக்கி
ஒரு உலக "மகா பாரதத்தை"
அரங்கேற்றத்துவங்கி இருக்கிறார்கள்.
நம் ஊர் பாம்பாட்டி சித்தர்களுக்கு
ஆள் அனுப்புங்கள்.
அவர்களது வாயு வேக சிந்தனைகளில்
இவர்களின்
பில்லியன் பில்லியன் ஒளியாண்டுகள்
எல்லாம் வெறும் "ஜுஜுபி"
"தாட் மூவ்ஸ்" எனும்
"சிந்தனை உந்தங்கள்" நம்
சித்தர்களின் சுவடிகளில்
சுருண்டு கிடக்குமா பாருங்கள்.
அஞ்ஞானங்களின் அடர்த்தியில்
விஞ்ஞானங்களின்
"நேனோ" உலகங்களே
இனி ஆட்சி செய்யும் இந்த
"நெருக்கடி நிலை" பிரகடனத்தை
முறியடிக்கும்
வலுவான மூளைச் சக்தியின்
பாட்டாளிகளேஇழக்கபொ
கிளர்ந்தெழுங்கள்.
இதனால் நீங்கள் இழக்கப்பொவது
உங்கள் அறியாமையின் கனமான
அடிமைச்சங்கிலிகள் தான்!
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக