சனி, 10 மே, 2025

"டப்பிங்க்"அல்ல மக்களே.

 

"ஏமாறாதே

ஏமாற்றாதே"

நான் சொல்லல்லப்பா

கண்ணதாசன் சொல்லீருக்காரு.

நான பாடல‌

டி எம் எஸ் பாடீருக்காரு.

நான் வாயசக்கலே

எம் ஜி ஆரு 

வாயசைச்சிருக்காரு..

நான் 

ஏமாறல.

நீங்களும் ஏமாந்திராதீங்க.

"ஜெய் ஹிந்த்!

ஜெய் ஹிந்த்!!

ஜெய் ஹிந்த்!!!"

இது மக்கள் குரல்.

மக்களே

உங்கள் ஓட்டுகளை

மட்டையாய் அடித்து

கவ்விப்பிடித்து

சிக்சர்களாப்போட்டு

உங்களை சிக்கல்களுக்குள்ளே

தள்ளிவிடப்போகும்

அந்த விளம்பரத்தனமான‌

கிரிக்கெட் விளையாட்டு அல்ல‌

"போர்".

உங்கள் சிந்தனை தான்

அக்கினி ஏவுணைகள்.

உங்கள் கூர்மையான‌

சமூக அரசியல் தான்

"பிரம்மோஸ்" ஏவுகணைகள்.

இந்திய மக்கள் வாழ்க!

இந்திய ஜனநாயம் வெல்க!

இது

"டப்பிங்க்"அல்ல மக்களே.

காலத்தின் கட்டாயம் இது.

நம் மண்ணின்

சிலிர்ப்புகளில் சீறும்

நெருக்கடிகளின் 

புயல் முழக்கங்கள் இவை!


___________________________________________

சொற்கீரன்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக