வெள்ளி, 2 மே, 2025

"கடவுள் கணிதம்"

 


"கடவுள் கணிதம்"

__________________________________________


ஒன்றும் இல்லை

என்பது 

ஒன்று இரண்டு மூன்று

நூறு ஆயிரம் கோடி

கோடி கோடி ....

எல்லை என்ற‌

தொல்லை இல்லை.

பரந்து படு.

நிரந்து இரு.

அறிவு 

உருண்டு திரண்டது.

அகன்று ஆழ்ந்து

பல்கிப் பெருகி 

நுணுகி நுழைந்து

நம் பிடியை விட்டு

நழுவியும் வழுவியும்

கண்ணுக்கும் கருத்துக்கும்

எட்டா தொலவில் இருந்து

வெளிச்சமாயும் இருட்டுமாயும்

எட்டும் அருகில்

நம் உள்ளுக்குள்ளும்

காணாமல் ஆயிரம் காட்சிகள்கள்

தந்தும்

வியப்பாய்

திகிலாய்

..........

என்ன "தத்துவம்" பிழிய 

ஆரம்பித்து விட்டீர்களா?

ஒன்றும் இல்லை.

"சீரோவையும் இன்ஃபினிடியையும்"

நூலில் கட்டி முடிச்சு போட முடியமா

என்று

பார்க்கிறேன்.

அதற்கு "காம்ப்லெக்ஸ்" ஆய்வு கணிதம்

நுழைந்தேன்.

சிக்கல் கணிதமா? கலம்பகக்கணிதமா?

அது என்ன கலம்பகம்?

"ரியல்+ இமேஜினரி" மேத்ஸ்.

அது தான் சொன்னது.

"ஹோலோமார்ஃபிக் ஃபன்க்சனும்"

மெரோமார்ஃபிக் ஃபன்க்சனும்"

படி..படி..படி

படித்துக்கொண்டேயிரு என்று.

படிக்கலாம் வர்ரீங்களா?

"மிட்டாக் லெஃப்லர் தியரம்"

படிக்கலாம் வாருங்கள்.

"ஸீட்டா ஃபங்ஷன்" எனும் 

இரும்பு வில்லை

வளைத்து முறித்துப்போட்டு 

விட்டு போய்விட்டான்.

"ஹெய்மான்"

"சீதா"வெல்லாம் வேண்டாமாம்.

நாற்பது வயதுக்குள்

கணிதத்தில்

நாலாயிரத்திவ்ய பிரபந்தங்கள்

முடித்து விட்டுப்போய் விட்டான்.

சப்பளாக்கட்டைகளில்

உப்பு சப்பற்று

ஒலிகள் உதிர்ந்து கொண்டே

இருக்கின்றன.


_______________________________________________

சொற்கீரன்.


"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக