வெள்ளி, 30 மே, 2025

கரடி_காளை விளையாட்டுகள்


கரடி_காளை விளையாட்டுகள்

____________________________________________



விஞ்ஞானமும் அஞ்ஞானமும் 

முகமூடிகள் போட்டுக்கொண்டு

"வாள் சண்டை" போடுகின்றன.

பங்கு மூலதனத்து

ஆரண்யங்களின்

கரடி_காளை விளையாட்டுகள்

உலக மகா மானிடத்தை

ஒரு பீஷ்மரின் அம்புப்படுக்கையில்

வீழ்த்தியிருக்கிறது.

மாயக்கிருஷ்ணங்கள்

எனும் இல்யூமினாடிகள்

ஆடும் சொக்கட்டான் 

செப்படி வித்தைகளிலிருந்து

மீட்கும் மீட்பர்கள் யார்?

வேறு யார்?

மனிதன் தான்.

அவனது கூர்மை செறிந்த‌

"மனிதம்" தான்.

உலக சமுதாய மானுட மலர்ச்சியின்

எழுச்சியே தீர்வு.

மானுடம் வெல்க!

___________________________________

சொற்கீரன்


Crims defeat human intelligence with fake AI installers they poison with ransomware

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக