வியாழன், 13 பிப்ரவரி, 2025

எழுதத் தேவையில்லை.

எழுதத் தேவையில்லை.

____________________________

ருத்ரா

 

பேனாவும் காகிதமுமாய் 

கருவுற்ற 

காலப்பதிவுகளும் 

நூற்றாண்டுகளும் 

என்ன சொல்லியிருக்கிறன ?

மண்ணின்  மனிதர்கள் 

புழுக்களாய் 

நசுக்கப்பட்டிருப்பதை 

புனுகு தடவி அலங்காரம் 

செய்திருக்கின்றன.

ஜிகினா வானங்களில் 

தெறித்து விழுந்த விடியல் போலிகள் 

இன்று வரை 

அந்த சூரியப்பிஞ்சின் 

புன்னகையை மறைத்தே 

வைத்திருக்கின்றன.

சாதிகள் மதங்களின் 

காக்காய் முட்படுகையில் 

கனவு ரோஜாக்கள்.

ரோஜாவின் முட்களைக்கூட 

ரோஜாக்களாகவே 

கனவுக்குள் கனவுகளாய் 

தின்று கொண்டிருக்கிற 

மனங்களில் 

என்றைக்கு தான் 

அந்த விடியல் விளிம்பு 

கரையை காட்டும்?

அது வரை இங்கு 

எதையும் 

எழுதத் தேவையில்லை.


---------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக