புதன், 5 பிப்ரவரி, 2025

எல் ஐ சி நம் மலர்ச்சியடா!

எல் ஐ சி நம் மலர்ச்சியடா!

______________________________________


எல் ஐ சி என்று சொல்லடா! அதை

எழுச்சி கொண்டு சொல்லடா

துளித்துளியாய்

வந்த நிதி 

கடல் போல ஆனதெல்லாம்

வேர்வை வடித்த பெருநிதியே.

பொதுத்துறை என்கின்ற‌

பொற்சுடர் அன்று வந்த‌திலே

இருட்டுத்தந்திர கோட்பாடு 

எல்லாம் அன்றே போனதடா!

மக்கள் செல்வம் மக்களுக்கே எனும்

விடியல் கீற்றாய் வந்ததடா!

சூழ்ச்சி கொண்ட திமிங்கிலங்கள்

சூதாட்டம் ஆடுதடா!

பகடை உருட்டி விழுங்கிவிடும்

மாயப்பங்கு மூலதனப்

புயலில் வீழ்த்திட வருகின்றார்  அந்த‌

பொய்மை ஆட்டம் தகர்ந்திடவே

எல் ஐ சி ஆஃப் இந்தியா 

என்ற 

இன்னொரு தேசிய கீதமதாய்

இதயம் அதிரப்பாடிடுவோம்.

ஒன்று பட்ட குரல்கள் இது!

ஓய்ந்து ஒடுங்கப் போவதில்லை.

எல் ஐ சி நம் மலர்ச்சியடா! அதை

காப்பதே நம் கடமையடா!


_________________________________________________

செங்கீரன்







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக