புதன், 12 பிப்ரவரி, 2025

அழிவின் நாக்குகள்!

 அழிவின் நாக்குகள்!

__________________________________________


அழிவு..பேரழிவு.

உமிழும் லாவா ஆறுகள்

கிளை பிரிந்து 

ஆர்ப்பரிக்கிறது.

இயற்கை அரக்கி என்றால்

நெருப்பில் வகிடெடுத்து

சீவிச்சிங்காரிக்கும்

இந்த கூந்தலை

அழகென்பதா?

அழிவென்பதா?

ஒரு பெரிய உயரத்து 

உச்சியில் நின்று

நாஸா 

இதை படம் 

எடுத்திருக்கிறது!

5000 ஆண்டுகளில்

ஒன்பது தடவைகள்

இவள் இப்படி

வெற்றிலை எச்சில்

உமிழ்ந்திருக்கிறாள்.

கடவுள் இருக்கிறார் என்று

ஒன்பது தடவைகள்

இவள் இப்படி

இம்போசிஷன் எழுதியிருக்கிறாள்

என்றால்

நீ எத்தனை தடவை எழுதினால்

எனக்கென்ன?

கடவுள் இல்லை என்றும்

ஒன்பதாயிரம் தடவைகள்

இம்போசிஷன்கள் எழுதப்பட்டிருப்பது போல்

துயரப்படுகிற மக்கள் புழுக்கள்

துடித்துக்கொண்டு தானே இருக்கின்றன.

நெருப்புக்கவிதைகளுக்கு

யாப்பிலக்கனம் எழுதி என்ன பயன்?

எரிமலை எப்படி பொறுக்கும்?

என்ற அந்த சினிமாப்பாட்டை

கேட்டு

அதிலும் மகிழ்வோமாக!


____________________________________________________________





NASA spots giant lava flows in California

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக