வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

வேலன்டைன்

 வேலன்டைன் 

______________________________________


மன வெளியில் ஒரு தேசம்.

அதில் உள்ளங்களின் உரசல் ஒலிகள்

மட்டுமே தேசிய கீதம்.

உதடுகள் அசைவதில்லை.

இதயத்தின் சிஸ்டோலிக் டையஸ்டோலிக்

முணுமுணுப்புகள் மட்டும்

அந்த "பிக்பேங்க்" முனை வரைக்கும் போய்

இடிக்கும்.

சொற்களோ வெறும் பாலைவனம்.

இமைகள் மட்டுமே

எல்லா மொழியும் பேசும்.

ஒன்று தந்தால் என்ன‌

குறைந்தா போய்விடுவாய்?

என்று

வெறும் மௌனப்பள்ளத்தாக்குகளில்

விழுந்து கிடப்பார்கள்.

இனம் புரியாத மகிழ்சசி !

இனம் புரியாத துயரம் !

"கல் பொரு சிறு நுரை "

என்று சும்மாவா சொன்னான் 

அந்த சங்கத்தமிழ்ப்புலவன்?

சூரியனிலிருந்து 

அந்த ஏழு வர்ணக் 

குமிழிகளையும் கொண்டு அல்லவா 

தங்கள் குடில்களை 

மிடைந்திருக்கிறார்கள்.

தினம் தினம் அவர்கள் பிரபஞ்சத்தில் 

"பிக் பேங்கஸ்" தான்.

இன்பத்தின் 

வெடிப்புச் சிதறல்களே தான் 

அவர்கள் சிகரத்தில் 

இருக்கும் "அகரமுதல"


-------------------------------------------------------------------------------

சொற்கீரன்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக