சாப்பிடட்டும் என்று.
_______________________________
கொடி என்ன?
சின்னம் என்ன?
நாடு என்ன?
ஆட்சி என்ன?
மக்கள் என்ன?
மொழி என்ன?
இன்னும்
என்ன? என்ன?
என்ன?க்கள் எத்தனை?
மனிதனுக்கு மனிதன்
எனும் மாண்பு
எங்கே போயிற்று?
ஒரு மனிதன் இன்னொரு
மனிதனுக்கு
தீங்கு செய்தால்
கை விலங்கு!
கால் விலங்கு!
அப்படி
சட்டங்கள்!
திட்டங்கள்!
மக்களுக்கு பொதுவான
வளம் எல்லாம்
மக்களுக்குத்தானே!
ஒரு மனிதன்
எல்லா வளங்களையும்
தனக்கே தான்
என்று எப்படி
வைத்துக்கொள்ள முடியும்?
அங்கே
ஆதிக்கம் எனும்
ஒரு கோரப்பல் ஒன்று
நடுவில் முளைத்தது.
அதன் ஆசை மடியில்
அமர்ந்தவர்கள்
மட்டுமே
வளங்களை
பயன் படுத்திக்கொள்ள முடியும்.
மற்றவர்கள்
அவர்கள் நினைத்தால் மட்டுமே
அவர்கள் விரும்பினால் மட்டுமே
பெற்றுக்கொள்ள முடியும்.
இப்போது தான்
எல்லோருக்கும்
உரிமை எனும் கொம்பு முளைத்தது.
எடுத்துக்கொள்.
முடியாது.
கிடையாது.
எனக்கே தான் எல்லாம்.
இல்லை
எல்லாருக்கும்!
எல்லாமும்!
எல்லோரும் உழைப்போம்.
எல்லோரும் வாழுவோம்.
எல்லோரும் வாழலாம்
என்பதே மனித மாண்பு!
இல்லார் என்று எவரும் இல்லை.
இப்படி
மனிதனுக்கு மனிதன்
தனக்குள்
ஒரு சமநீதியை
நட்டு வைத்துக்கொண்டால்
துப்பாக்கிகள் எதற்கு?
கை விலங்குகள் எதற்கு?
இந்தக்கணக்கு
தீர்த்துக்கொள்ளத்தெரியாமல்
மனிதர்கள்
ரத்த ஆறுகளாய்
பெருக்கெடுத்தார்கள்.
தங்கள்
எலும்புக்குப்பைகளை
மண்ணில் மிச்சம் வைத்தார்கள்
பின்னோர்கள்
வரலாறு எழுதிக்கொள்ளட்டும் என்று.
பூமியில்
இவர்கள் போட்டுக்கொண்ட
கோடுகளே
நாடுகள் ஆனது.
இன்னும் இதன் அர்த்தம்
துப்பாக்கிகள் தான்.
கை விலங்குகள் தான்.
உச்சியாய் சிகரமாய்
நாகரிக ஒளி வீசுகிறோம்
என்றெல்லாம் பாடல்கள்
முழங்குகின்றன.
இன்னும் இன்னும்
இங்கே
மனிதர்கள்
வர்த்தகப்படமெடுக்கும்
பாம்புகளின் நிழல்களில் தான்.
கையாலாகாத கடவுளர்களின் கைகள்
என்றோ வெட்டப்பட்டு விட்டன.
கடவுள்களின் சவப்பெட்டிகள்
இங்கு கோயில்கள் ஆயின.
வீறு கொண்ட மனிதம் என்பதன்
அடிச்சுவடு
மீசை முறுக்கிக்கொண்டு நிற்பதாக
இங்கே எந்த அடையாளங்களும் இல்லை.
உரிமையற்ற மனிதம்
வீழ்ந்து கிடக்கிறது
மண்ணின் அடி ஆழத்தில்
புழுக்கள் சாப்பிடட்டும் என்று!
______________________________________________________
சொற்கீரன்
______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக