வியாழன், 27 பிப்ரவரி, 2025

ஹலோ ..ஹலோ.

 


தூக்கத்தில் நடக்கிற வியாதி 

எனக்கு.

கால் போகிற போக்கா?

மனம் கூப்பிடுகிற வழியா?

யாரோ எதறகோ 

கூப்பிடுகிறார்....

தெரியவில்லை  

கூப்பிட்டுத்தான் பார்ப்போமே.

ஹலோ ..ஹலோ.

......................

அந்த படுக்கையறையில் 

ஒரு டாக்டர் 

திடீரென்று படுக்கையிலிருந்து 

விழித்து எழுகிறார்.

அந்த ஹலோ ஹலோ  குரல் 

அவருக்கு கேட்கிறது.

எங்கிருந்து ....

தெரியவில்லை.

அவர் தன் மாராப்பை உற்று 

கவனிக்கிறார்.

அவருடைய "ஸ்டெத்" 

அவருடைய காதுகளில்  மாட்டியிருக்கிறது..

இது எப்படி...?

என்று யோசிப்பதற்குள் 

அந்த கருவியிலிருந்து 

அந்த குழாயிலிருந்து  சத்தம் தொடர்கிறது.

அவர் வேல வெலத்துப் போகிறார்...





(தொடரும்) 

__________________________________________-

 சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக