"குஷியில் வயலூர் முருகன்"
_______________________________________
சொற்கீரன்.
இந்த தலைப்பில்
யு ட்யூப் எனும் விண்குழல்
ஒரு புல்லாங்குழலாய் இனிய செய்தியை
இசையாக்கி பரப்பியது போல்
இருந்தது.
முருகனுக்கு குடமுழக்கு
தமிழர்கள் கையால்!
இது வரை அந்த ஆரியச்சாக்கடையையா
என் மீது கொட்டிக்கவிழ்த்தீர்கள்?
அந்த முருகனுக்கு இன்று
"ஒரே கொண்டாட்டம்!"
"அனைத்துச் சாதியினரும் இனி
அர்ச்சகர் ஆகலாம்"
என்பது ஒரு
சமுதாயக்கன பரிமாணம் ஆகிப்போனது
பற்றி
இனி மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான்.
இருப்பினும்
அந்த தராசு நிழல்களில்
ஆதிக்க வேதாளங்கள் சுருண்டுகிடக்கின்றன.
என்னருமை தமிழ் மக்களே!
நக்கீரன் தந்த திருமுருகாற்றுப்படை
நம்மிடம் இருக்கிறது.
அய்யோ! சங்கத்தமிழா?
அது யாருக்குப்புரியும்?
என்று புலம்புபவர்களே
இந்த சங்கிக்கூச்சல் மொழி மட்டும்
உங்களுக்கு புரியுமா?
அவர்களுக்கே அதன் உட்பொருள்
இன்னும் புரியவில்லை.
அந்த "சுப்ரஹ்மண்யன் ஏன்
பிராமணப்பெண்களை விட்டு விட்டு
குறிஞ்சிப்பெண்ணான
வேட்டை நாற்றம் வீசுகின்ற
வள்ளியை மணம் செய்தான்?
அப்போதே அவன் சாதியை
வேட்டையாடி விட்டான் என்று
உங்களுக்கு இன்னுமா புரியவில்லை.
அதில் ஏதாவது ஒரு கிளைக்கதையை சொருகி
அவள் பிராமணப்பெண்குழந்தை தான்
என்று மாய்மாலம் செய்வது தானே
இந்த புராணங்கள்.
பிராமணக்கடவுளை சுமக்கின்ற
வாகனங்களுக்குக்கூட
மிருகங்கள் என்ற போதிலும்
பூணூல் மாட்டாத குறையாய்
மந்திரங்களை உச்சரிப்பார்கள்.
பெருச்சாளி "அருள்மிகு" பெருச்சாளியாய்
உங்கள் முன் முகம் காட்டும்.
முருகன்
அறிவின் பரிமாணம்.
அழகின் அடையாளம்
குறிஞ்சித்திணையின் உட்குறிப்பு.
மலைவளம் கொண்ட தமிழ் மண் தான்
அங்கே பூசனை பெருகிறதே ஒழிய
ஆரிய இரைச்சல்களுக்கு
அங்கே இடமில்லை.
ஆரியப்படையை ஒரு பாண்டியன்
கடந்து அதாவது வென்று
ஒளி காட்டிய பின்னும்
விழியிழந்தவனாய்
ஓ தமிழா!
உன் வழி இழக்கலாகுமோ?
"அந்த நீ சிந்தி"
உன் சிந்தனை வெள்ளம்
சிந்து கின்ற அந்த
சிந்து வெளி தான் உன்
தமிழ் வெளி என்று நீ
உணர்ந்த பின்னும்
ஏன் இன்னும் இங்கே
ஆரிய வன்மம்?
சிந்துத்தமிழா சிந்தி!
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக