ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

வினாக்களையே தின்று...

 


வினாக்களையே தின்று...

_________________________________




இன்றைக்கு


என்ன வந்தது உனக்கு?


ஏதோ ஒன்று!


இந்த இடத்தில் என்


மைல் கல்லை நட்டுக்கொண்டு


பலூன்கள் கட்டி


மிதக்க விட ஆசை.


அவ்வளவு தான்!


ஒரு கொட்டாங்கச்சியில்


கடலை அடக்கிக்கொண்டு


அத உற்றுப்பார்க்க ஆசை.


வானம் முழுவதையும் கூட‌


கோவணமாக கட்டிக்கொண்டு


அந்த குண்டலினியை


எட்டிப்பிடிக்க‌


கண் மூடிய பிணமாய்


உட்கார்ந்து கொள்ள ஆசை.


பிறந்த உடனேயே


இறப்பின் சுவையை


தெரிந்து கொள் 


என்றார்கள்.


அதற்கு பிறக்காமலேயே


அண்டம் முழுதும்


சவமாய் மிதக்கலாமே


என்றேன்.


கடவுள் அப்படியெல்லாம்


மிதந்து பார்த்து விட்டாராம்.


அதற்கு என்ன?


என்னவா?


மனிதனின் 


உள் கருப்பையை


அவரால் நுழைய முடியவில்லையாம்!


எல்லையற்ற பரம்பொருளுக்கா


இப்படி ஒரு தொல்லை?


அப்படித்தான்


ஒரு இளைஞன்


நாலந்து பி எச் டி களெல்லம்


படித்து விட்டு அவன்


கணினியை தட்டிக்கொண்டிருந்தானாம்.


அவன் விரல் இடுக்குகளைப் பிடித்துக்கொண்டு


வழி மறித்து நின்று


கேட்கலாம் என்று நுழைந்தாராம்.


ஆனாலும் கீ போர்டு


தட தடத்தது.


கடவுளுக்கு ஆச்சரியும்!


எங்கே அவன் தட்டிக்கொண்டே


போகிறான்?


அவனும் போய்க்கொண்டிருக்கிறான்


அவனுக்குப் பின்னே


இவரும் போய்க்கொண்டிருக்கிறார்.


அவன் பில்லியன் பில்லியன் ஒளியாண்டுகளை


"க்யூபிட்"களில்  சுருக்கிக்கொண்டு


எங்கோ சென்று புள்ளியாய்


மறைந்து விட்டானே!


குவாண்டம் கணினியின் "சிப்புக்குள்ளும்"


உள்ளே போய் கருவுயிர்த்துக்கொண்டது.


இந்த பிறப்பு ‍இறப்பு ட்யூவாலிடியின் 


காசாலிடிக் கயிற்றின்


எந்த முனையை எந்த முனையிலிருந்து


பாய்ச்சல் புரிந்து பிடிப்பது?


கடவுள் என்டாங்கில்மென்ட் மனிதன் 


என்றால்


மனிதனின் என்டாங்கில்மென்ட் கடவுளா?


வினாக்களையே தின்று


வினாக்களையே குட்டி போடுவது தானே


விஞ்ஞானம்!


__________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக