திங்கள், 10 பிப்ரவரி, 2025

எழுவாய் நீ.

 



தமிழா!

_________________________


குரல் கேட்கிறதா?

உன் குரல் தான்.

உன் குரலே தான்.

இந்த துருப்பிடித்த 

நூற்றாண்டுகள்

சாதியாய் மதமாய்

உன்னை மிதித்துக்

கூழாக்கியத்தில்

கூளமாகிப்போனாயோ?

கூவிளங்காய் கருவிளங்காய்

என்று

இலக்கணம் சொல்லி

பாட்டு எழுதியவனா நீ?

உன் குயில்கள் எழுப்பும்

விடியல் ஒலிகளின்

இலக்கியம் அறியாமல்

இற்றுக்கிடக்கிறாய்.

இரைச்சல் மந்திரங்களில்

இறந்து கிடந்து எந்த

இறைவனைக்

காணப்போகிறாய்?

உன் உயிர்

உன் தமிழ்!

உணர்வாய் நீ.

உணரும்பொழுதே

எழுவாய் நீ.

எழுவாய் என்பதே

இனி உன் 

எரிமலை இலக்கணம்

ஆகும் என்பதும் 

அறிவாய் நீ!

_____________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக