பிம்பங்கள்
------------------------------------------------------
அந்தக் கண்ணாடி
சுக்கல் சுக்கலாக நொறுக்கப்பட்டது.
கூர்மையாக
கோடுகளாக
சதுர முக்கோண துண்டுகளாக
கண்ணாடித்துண்டுகள்.
முகத்தின்
கண்கள் வாய் மூக்கு
புன்னகைத்தளும்பல்கள்
காதுகள்
எல்லாம் சிதறி சிதறி
இறந்து கிடக்கின்றன.
கனவுகளின் அந்த
ஃ ப்ராக்டல் ஜியாமெட்ரியில்
நம் சுதந்திர வடிவத்தை
எப்படி முழுமையாக்குவது?
அதோ அந்த காயலாங்கடையில்
சம்மட்டிகளின்
சத்தங்கள் சகிக்கவில்லை.
சட்டப்புத்தகங்கள்
உயிரற்ற எலும்புக்கூடுகளாக
சிதிலங்களின் சித்திரங்களாக
வரும் நாட்களில்
வரலாற்றுக்கொக்கரிப்புகளின்
மியூசியங்களாக
காங்கிரீட் கட்டிட சவப்பெட்டிகளாய்
காட்சிப்படுத்தப் படலாம்.
---------------------------------------------------------------------------------
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக