புதன், 2 ஆகஸ்ட், 2023

தமிழை ஏசும் தமிழ்.

 தமிழை ஏசும் தமிழ்.

________________________________________________

ருத்ரா


"எழுத்தாளர்கள் இந்த நாட்டின் முதுகெலும்புன்னு 

சொன்னேன்..

தட்னான் பாருங்க தட்னான் தட்னான் 

தட்டிக்கிட்டே இருந்தான்..."

பாருங்கள் 

டணால் தங்கவேலு அவர்கள் 

அன்றே சொல்லிவிட்டார் இந்தப் போலிகளை.

எழுத்துப்பசியெடுத்து எழுதிவர்களின்

வயிற்றுப்பசிக்கு வகை செய்தவர் அல்லவா

பத்ரி சேஷாத்ரி அவர்கள்.

காலச்சுவட்டில் சுவடு பதித்தவர்களின் எழுத்துகளின் 

சிகரம் கூட‌

இவர்கரோடு கொஞ்சம் வளைந்து 

நிழல் சாமரம் வீசியதோ 

என்று எண்ணும் வண்ணம்

சிலர் கும்மி கொட்டியதைப்பார்த்தோம்.

அறிவுஜீவித்தனம் என்பது

சில சமயங்களில்

உயிர் எழுத்துக்களின் மார்ச்சுவரியாய்

ஒரு முட்டு சந்தில் முட்டிக்கொள்ளும்

என்ற வேடிக்கையான வேதனையைத்தான்

நாம் பார்த்தோம்.

பேரறிஞர் அண்ணா ஒரு இடியட்.

தமிழர்களின் பொறுக்கித்தனம்.

சனாதனம் சொல்கிறது

பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் 

எல்லாம் காட்டுமிராண்டிகளே.

இதில் பழங்குடிகள் மலைவாசிகள் 

எல்லாம் நாற்றம்பிடித்தவர்கள் தான்

என்கிற போக்கில் தான்

மணிப்பூர் மக்களைப்பார்க்கிறார் 

பத்ரி.

உச்சநீதிமன்றத்துக்கு இங்கே என்ன வேலை?

வேண்டுமானால் அவர்கள் துப்பாக்கி கொண்டுபோய்

அடக்கிவிட்டு வரட்டுமே.

உச்சநீதிமன்றம் கூட‌

இவர்கள் நூலுக்குமுன் 

துச்சநீதி மன்றங்கள் தான்.

பாபர் மசூதி இடிக்கப்படும்போது

அமெரிக்காவில் இருந்தேன்.

ஏனோ அது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இப்படி அவர் கூறிய‌

மேலே கண்ட வரிகளுக்காகவே

அவருக்கு நூறு பாரதரத்னா கொடுத்துவிடலாம்

போலிருக்கிறது

என்று மகிழ்ந்தவர்களும் இங்கே இருக்கிறார்கள்.


எழுத்து என்பது மொழியைவிட்டு

வெளியேறி விடவேண்டிய கூட்டுப்புழுக்கள்

இதில் தமிழ் என்ன திராவிடம் என்ன?

தமிழை நக்கிக்கொண்டிருப்பவர்கள் 

வேண்டுமானால் 

தமிழுக்கு மணிமண்டபங்கள்

கட்டிக்கொண்டிருக்கட்டும்.

இதற்கு

நவீனத்துவம் பின் நவீனத்துவம்

இன்னும் எக்சிஸ்டென்ஷியலிசம் 

என்றெல்லாம் அவர்கள் 

ஜோல்னாப்பைக்குள்ளிருந்து 

புறாக்கள் பறக்கவிடுவார்கள்.

தமிழைக்கொண்டு தமிழையே கைம்மா 

போடுவார்கள்.

மறந்தும் அந்த தேவபாஷைக்கு

நூல் போடும் சடங்குகளில் 

சமஸ்கிருதத்தை புனிதம் என்று வருடிக்கொடுக்கும்

வழக்கத்தை விட்டே கொடுக்க மாட்டார்கள்.

இப்படித்தான் 

ஒரு புளியமரத்தின் கதையை எழுதுகிறேன்

என்று ஒருவர் 

மனித வாழ்க்கையின் எச்சிக்கலைத்தனங்களை

எழுத்தாக்கி விருதுகள் ஆக்கினார்.

இந்த தேவபாடைத்தும்பிகள் 

அவரையே மொய்த்துக்கொண்டு

தமிழ் இலக்கியத்தை சாக்கடையில் 

வீசினார்கள்.

சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தனும்

இந்த நோய்க்கு பலியானவர் தான்.

சாஸ்திரங்கள் எனும் ரோடு ரோலர்களைக்கொண்டு

இந்த கீழ்ச்சாதி புழு பூச்சிகளை

நசுக்கி விடுவதே இந்த ஆதிக்கத்தின் குறி.

இதற்கு வாளை உருவிக்கொண்டு

காவல் காத்தவர்களே நம் மன்னர்கள்.

சனாதனம் என்றால் இது தான் என்று

எழுதப்படாமலேயே

இதுவும் இங்கே "சுருதி" தான் 

என்று இங்கே துதி பாடப்படுகிறது.

இந்த எக்காளங்களின்

அடி நாதமே 

இந்த "மனிதமை" வெறுப்பு தான்.


____________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக