வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

யாரோ அவர் யாரோ?

 



யாரோ அவர் யாரோ?

_________________________________________

ருத்ரா


ஒருவர் என் பிறந்தநாளுக்கு

அன்று

வாழ்த்து அனுப்பவில்லை.

இன்று அவருக்கு

வாழ்த்து அனுப்பவேண்டுமா?

மனதுக்குள் சைத்தான்

பல்லை நற நற என்று கடித்தது

வேண்டாம் என்றது.

இதே போல் தான் ஏதோ 

ஒரு சைத்தான் அன்று

அவரிடம் பல்லைக்கடித்திருக்கவேண்டும் 

என்று நினைக்கிறேன்.

போகட்டும்.

யாரோ அவர் யாரோ?

யாராகிலும் எல்லாம் மனித வாசமும் சுவாசமும்

சுடர்கின்ற வெளிகள் தான்.

சைத்தான்களே

கொஞ்சம் கை குலுக்கிக்கொள்ளுங்கள்.

வாழ்த்துப்பூக்கள்

அன்பின் மகரந்தங்களை

எல்லா வெளியிலும் தூவுகின்றன.

அதனால் தான் இந்த‌

வானம் இன்னும்

பளிங்கு நீலமாய்

புன்னகை விரிக்கிறது.

___________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக