சூப்பர்ஸ்டார்
____________________________________________
சூப்பர்ஸ்டார் என்றால்
நாம் நினைத்துக்கொண்டிருந்தோம்
சிகரெட்டை உயரத்தில் போட்டு
வாயில் கப்பென்று பிடித்து
பற்ற வைத்துக்கொள்பவர்
என்று.
கருப்புக்கண்ணாடியை
போடுவதும் தெரியாது
கழற்றுவதும் தெரியாது
மொத்த சூரியனையே
கண்ணாடியாக்கி வித்தை காட்டுபவர்
என்று.
இந்தப்பக்கம்
காதலிக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே
அந்தப்பக்கம்
வில்லன்களுக்கு கும்மாங்குத்துகள்
பொழிபவர் என்று.
ஆனால் இப்போது
இப்படி ஒரு சூப்பர்ஸ்டாருக்கெல்லாம்
சூப்பர்ஸ்டார்
காவி உடுத்துக்கொண்டு
புல்டோசராக வந்து நிற்பார்
என்று
நமக்குத்தெரியவே தெரியாது.
_______________________________________________ருத்ரா
26.08.23
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக