வியாழன், 24 ஆகஸ்ட், 2023

அந்த சிரிப்பு

அந்த சிரிப்பு 

________________________________‍___

ருத்ரா


க்ளுக்கென்று

உன் சிரிப்பை ஒரு தடவை

பார்த்தால் 

கேட்டால் போதும்.

அதற்கு இத்தனை

யுகங்களா வேண்டும்?

முடியவில்லை.

என்ன செய்யலாம்.

அதோ பளிங்கு போல் 

நிழல் காட்டும் அந்த தடாகத்தில்

என் கையில் உள்ள ரோஜாவை

எறிந்தேன்.

ஆஹா!

அந்த அலை வட்டங்கள் எல்லாம்

அந்த க்ளுக் சிரிப்பு தான்.

சந்திராயன் 3 என்ற பூவை 

நிலவில் இட்ட மகிழ்ச்சி வெள்ளம் 

எங்கும் எங்கும்!


____________________________________________________‍


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக