ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

ஜெயிலர் 2

 ஜெயிலர் 2

__________________________________

ருத்ரா



அதற்குள்

ஜெயிலர் 2 வும் வெளியாகி விட்டதா என்ன?

பரபரப்புகளும் பத்திரிகைசெய்திகளும்

தூள் கிளப்பிக்கொண்டிருகின்றனவே.

அதிலும் ஷூட்டிங்க் எல்லாம்

இமயமலை ஆத்மீக பயணமும்

இன்னோரு பாபாவிடம் கிடைத்த‌

ஒளிவட்டமும் 

பற்றிய படம் போலிருக்கிறதே.

பாக்ஸ் ஆஃபீஸ் ஓட்டு வசூல் மழையின்

அந்த அதிரடி வெள்ளமும்

கலக்கும் காட்சிகள் அற்புதம் தான்.

நடுநிலையின் தராசு ஏந்தி

எதிர் அணியிடமும் 

அன்பாய் பண்பாய் முறுவல் பூத்த‌

காட்சிகளும் மறக்க முடியாதவை.

ரஜனி அவர்களே.

இப்போதாவது புரந்துகொள்ளுங்கள்

என்று நாங்கள் கேட்டுக்கொள்ளத்தேவையில்லை.

கிருஷ்ணர் அர்ஜுனர்

அப்புறம் கீதையின் தேர்

எல்லாம் விஸ்வரூபம் காட்டும்

என்பதும் உங்களுக்கு தெரியும்.

அது பாஞ்சஜன்யமா? இ.டி யா?

ரஜனி அவர்களே.

துணிந்து நில்லுங்கள்.

இந்த ரசிகர்களுக்குள்ளும்

மக்களின் சீற்ற நரம்புகள் 

இழையோடிக் கொண்டு தான் இருக்கிற‌து.

ஜனநாயகத்தை வில்லனாக்கி

போரிடும் காட்சிப்பொறிக்குள் 

விழுந்துவிட மாட்டீர்கள் என்று

திடமாய் நம்புகிறோம்.

வெற்றி நமதே


_________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக