ஜெயிலர்
--------------------------------------------------------------
ருத்ரா
ரஜினி
சூப்பர்ஸ்டார் என்ற செங்கோலை
நன்றாக தூக்கிக்காட்டி விட்டார்..
வசூல் ஒரு வாரத்துக்குள்
நானூறு கோடி என்றால் சும்மாவா?
இந்த உலகத்துக்கே
ஒரு மூக்கும் விரலும் மட்டுமே இருக்க்கிறது
மூக்கில் விரலை வைத்து
வியந்து கொள்ள.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார்
தனியாக ஒரு இமயத்தையும் சிகரத்தையும்
படைத்துவிட்டார்
அதில் ஏறி கொடி அசைக்கிறார்.
அந்த வெற்றிக்கொடியே "ரஜினி".
படத்திற்கு சிறப்பு முத்திரை எல்லாம்
எதுவுமே இல்லை
விளிம்புகளை எல்லாம் உடைத்துக்கொண்டு
வன்முறையின் கோரமுகம் கொப்பளிக்கிறது.
இதற்கு ஒரு அலிபியை
வில்லன் ஏற்கனவே அரங்கேயேற்றியிருப்பார்.
இப்படித்தான்
கிருஷ்ணர் வந்து
சம்பவாமி யுகே யுகே என்பார்.
பாசிபிடித்துப்போன
இந்த ஒரு வரிக்கதையைத் தான்
ட்ரேக் ரிக்கார்டு ஆக்கி
சினிமாக்களும் ஆட்சிகளும்
சாதி மத
ரோடு ரோலர்களை வைத்துக்கொண்டு
மனிதப்புழுக்களை
கூழாக்கியிருக்கின்றன.
சத்தியாஜித் ரே என்ற ஒரு மானிடவெளிச்சம்
காமிராவுக்குள் இருந்த
இருட்டுக்குடலை உருவி
மின்னல் தெறிப்புகளாய் ஆக்கி
ஒரு சரித்திரம் தந்தாரே
அதெல்லாம் எங்கே போனது?
சரி போகட்டும்.
இந்த நானூறு கோடிகளுக்கு
நாமும் வைப்போம் ஒரு சல்யூட்.
------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக