குள்ளமணிகள்
___________________________________
ருத்ரா
காமெடியில்
குலுங்க குலுங்க
சினிமா ரசிகர்களை
சிரிக்க வைத்தவர்கள் தான்
இவர்கள்.
அசல் வாழ்க்கை
எனும் ஆசிடில்
கரைந்து போன நிழல்கள்
இவர்கள்.
இவர் மட்டும் அல்ல.
நம் சமுதாயம் நச்சு நிழல்களால்
"கிரகணம்"ஆன போதும்
அதை தீட்டு கழித்துவிட்டு
சத்தமில்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்
வெறும் சாஸ்திரங்களின்
அட்டைப்பூச்சிகளே நாம்.
ஒரு சிலருக்கு மட்டும் புண்ணியம்
பிறப்பின் வழியாக வந்து கொண்டே இருக்கும்.
மற்றவர்களுக்கோ
பாவ ஜென்மம் மட்டுமே
கல்வெட்டில் பொறித்திருக்கும்.
இதுவே நம் பிறப்புகளின் சாஸ்திரம்.
இதை வைத்துக்கொண்டு
மேலும் மேலும் நம் சமுதாயத்தை
ஓட்டை போடுவதைத்தவிர
வேறு என்ன செய்திருக்க முடியும்.
நம் கும்பமேளாக்களும் கும்பாபிஷேகங்களும்
கூட
ஒளியில்லாமல் திரையில்லாமல்
காட்டப்படும் சினிமாக்களே.
கடவுள் என்று யாருமே இல்லாத போது
அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று
அரக்க லேபிள் ஒட்டிய மாற்று மத
பக்தர்களின் குடல்கள் மட்டும்
கிழிக்கப்படும்.
சிங்கத்தலை வைத்துக்கொண்ட
மனித முகமூடிகள்
ரத்தம் வழிய வழிய
கர்ஜித்துக்கொண்டே இருக்கும் .
குள்ளமணிகளின் காமெடியை விட
அற்புதமான காமெடிகளே இவை.
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக