வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

தேடுங்கள்.

 

தேடுங்கள்.

மண்ணைதோண்டுங்கள்.

விண்ணைப் பிளவுங்கள்.

தொலைநோக்கி எனும்

உங்கள் மொத்த விஞ்ஞானத்திரட்சியை

உற்றுநோக்கும் விழிகள் 

ஆக்குங்கள்.

தோற்றாம் என்று நம் அறிவுக்கணிதம்

சொன்ன 

பெருவெடிப்பின் கருப்பைக்குள்ளும்

நுழைந்து பார்த்து

கால வெளியின் அந்த‌

வேர்த்தூவியின் முனையை

முனைப்புடன் தேடுங்கள்.

ஒளியாண்டுகள் நீட்டும்

ஒளியின் நீள நீள நாக்கின்

அதிர்வு மொழியை

உற்றுக்கேளுங்கள்.

உங்கள் உண்மைகள் வெளிச்சத்தை

இங்கு மழையாக பொழியட்டும்.

அதில் துளிர்க்கும் 

புதிய புதிய அறிவுக்கொழுந்துகள்

நம் இருட்டுக்களை 

கிழித்தெறியட்டும்.

பொய்மை வழக்கங்கள் 

மண்மூடிப்போகட்டும்.

புதிய அறிவோட்டம்

கண்விழித்துப் பாயட்டும்.


_____________________________________________________________‍

ஒளிவண்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக