"ஏ ஐ ஐ இ ஏ "
____________________________________
ஏ ஐ ஐ இ ஏ
இவை என்ன வெறும்
எழுத்துக்களின் ஈக்கூட்டமா?
உழைக்கும் சிறகுகள்
வியர்வையை மின்னலாக்கி
வானத்தையே சிலிர்க்கவைக்கும்
அறிவு சார் ஆயுள் காப்பீட்டுக்கழக
ஊழியர்களின் வெற்றிப்பேரணிகளின்
உயிரெழுத்துக்களின்
கூட்டெழுத்தே
ஏ ஐ ஐ இ ஏ!
அதைத் தலைமை ஏற்று
சுடரேந்தியாய் நிமிர்ந்து நிற்கும்
தோழர் கந்தசாமி சுவாமிநாதன்
நம் இயக்க எழுச்சிகளின்
"சுநாமி நாதன்" அல்லவா?
அவர் குரலெழுப்பினால்
தடைபோடும் பாறைகள் நொறுங்கிப்போகும்.
உழைப்பாளர் இயக்கத்தின்
பேரகராதியை புரட்டிப்பாருங்கள்
அதில்
"ஓய்வு" என்றால்
ஓயாத பேரலைகள் என்றல்லவா பொருள்.
நம் தோழரின் பொருள் முதல் வாதமே
பொருளாதார அநீதிக்கோட்பாடுகளை
அடித்து நொறுக்குவதே ஆகும்.
மரண ஃபண்டுகள் என்ற
காளான் கூட்டக்கம்பெனிகள்
பொதுத்துறைப்பாதைக்கு திருப்பிவிட்ட பின்
ஒரு பொன்னுலகம் படைக்கும்
இந்திய ஆற்றலாய் அலைவிரித்தது
நம் கட்டுக்கோப்பான அமைப்பினால் தான்.
நம் ஊழியர்களின் உந்து சக்தியில்
உலகமே உற்றுப்பார்த்தது
ஆயுள் காப்பீட்டு வணிகம் என்ன
அப்படி யொரு ராட்சச பொன்முட்டை வாத்தா
என்று?
நம் அறிவார்ந்த உழைப்பு
ஒவ்வொரு பைசா பிரீமியத்திலும்
பில்லியன்களின் சிகரங்களை கூடு கட்டியது.
நம் எல் ஐ சி வரலாற்றுப் பாதையின்
போராட்டங்களில்
நாம் நட்டு வைத்த மைல்கற்கள்
கதிர் வீசி தெறித்து நிற்பதே
"ஏ ஐ ஐ இ ஏ."
தோழர் கந்தசாமி சுவாமி நாதன்
ஒற்றிய வரலாற்றுத்தடங்களே
எழுச்சி தரும் பாடங்கள்.
அவர் பணி நம் ஒளி.
அதுவே இன்னும் இங்கு நம் வழி.
வாழ்க!வாழ்க!
தோழர் கந்தசாமி சுவாமிநாதன் அவர்களே!
வாழ்க நீங்கள் நீடூழி வாழ்க!
___________________________________________________
தோழமையுடன் இ பரமசிவன்.
(முன்னாள் எல் ஐ சி ஊழியன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக