ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

மரண மழை

 Facebook


ருத்ரா


மரணங்களின் பிரசவ கூடம்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

ஆப்பன்ஹீமர்

அணுக்கதிர் பிளந்து பார்த்து

பசியெடுத்த பூதம் ஆனான்.

நான் இருக்கிறேன் என்று

மார் தட்டி சொன்னான்

கீதையின் கிருஷ்ணன்.

தயங்காதே என்றான்.

வெள்ளை ஆரியனும் 

இன்னொரு ஆரியனை

அழிப்பதாய் சொல்லி

அப்பாவி மக்களை

லட்சக்கணக்கில் 

தின்று தீர்த்தான்.

அன்றைய குருட்சேத்திரமும் 

அப்படித்தான்.

கௌரவர்களை கொல்வதாய்

கிளம்பியவர்கள் 

அந்த நாட்டு மக்களுக்கே

மாபெரும் சுடுகாட்டின் 

பயங்கரத்தை காட்டினார்கள்.

போர் தர்மம் என்று

ஒரு சங்கு முழக்கி

மானுட தடத்தை அழித்தார்கள்.

அந்த மக்கள் கடலில்

யாரோ எவனோ

வர்ணமாவது மண்ணாங்கட்டியாவது

என்று குரல் எழுப்பியிருப்பான்.

அதனால் தான் அன்று

அந்த மொத்த சாவுகளின் 

நச்சுப்புகை மண்டலம்.

இன்றும் அந்த‌

ஹாலிவுட் காமிரா விளிம்பு வரைக்கும்

மானுட நேயம் என்ற புள்ளிக்கும்

கார்பரேட் அச்சம் 

விரிந்து பரந்து

அந்த நாய்க்குடைக்காளானாய்

மரண மழையை உமிழ்கிறது.


________________________________________________







படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக