நடிகர் திரு பிரகாஷ்ராஜ்
_________________________________________
வாழ்க்கையை நடிக்காத
ஒரு அஞ்சாநெஞ்சன் இவர்.
இவர் வில்லனாக நடித்த
அந்த கில்லியில்
கதாநாயகியிடம் இவர்
காட்டும் தவிப்பும் தாபமும்
செல்லம் என்று அழைப்பதில்
உள்ள குழைவும்
நடிப்பில் அது ஒரு
புதிய பரிமாணம்.
படங்களில் ஒரு கதாநாயகன் தான்
ஈர்ப்பாக இருப்பார் என்பதை
மாற்றி
ஒரு வில்லனாலும் நடிப்பின்
ஈர்ப்பு காட்டமுடியும் என்பதற்கு
இந்த படம் ஒரு சான்று.
இது மட்டும் அல்ல
டூயட் படத்தில்
நம்மை மெய்சிலிர்க்க வைத்து விடும்
அவர் நடிப்பு.
கண்களில் காதலை காட்டுவதே
நடிப்பு என்று
ரசிக்கப்பட்ட கோணத்தை
இவர் மாற்றியிருப்பார்.
கண்களையே படபடப்பான
காதலாக மாற்றி
முகத்தில் பதிக்கவிட்டது போல்
உணர்ச்சிகளைக்
கொட்டிக்கவிழ்த்திருப்பார்.
அந்த வில்லன் பாத்திரம்
உண்மையில் ஒரு கனமான பாத்திரம்.
படத்தின் கதை ஓட்டத்தில்
பிரபுவும் ரமேஷ் அரவிந்தும் தான்
"காதலின்"அந்த திருக்கு முறுக்கான
சந்திப்பில் நின்று நடித்திருப்பார்கள்.
பிரகாஷ்ராஜ் ஒப்புக்கு வந்து
மிரட்டிப்போகும் வில்லன் தான்.
ஆனால் அவரது ஒரு தலையான
காதலை வில்லத்தனத்தில்
விதைத்து வைத்திருந்த போதிலும்
அதில் அவர் காட்டும் பதற்றமும் வெறியும்
பிறழ்ந்து போன ஒரு மனப்பிம்பத்தை
நன்கு வெளிப்படுத்தியிருக்கும்
சிறந்த நடிப்பு அது.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக