புதன், 16 ஆகஸ்ட், 2023

இரு ஞாயிறுகள்

 


1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்




இரு ஞாயிறுகள்
_______________________________________


முரசொலியின் 
உரசொலியில்
விழித்தது அன்று
தமிழகம்.
சிலிர்த்தது அன்று
தமிழ் நெஞ்சம்.
முரசொலியின் பெயர்
மாறனா?
மாறனின் பெயர்
முரசொலியா?
அந்த‌
ஒலியின் அதிர்வுகளில்
விழுந்த விதையே
மாநில சுயாட்சி.
கலஞரின் தமிழ் வெள்ளம்
இன்பத்தேனாய்
இல்லம் தோறும்
நுழைந்ததுவே!
ஆரியம் என்றொரு
பாறாங்கல்
தமிழன் தலையில்
விழுமுன்னே
திராவிடப் பெரும்
தமிழ் ஆற்றல் அதை
தூள் தூள் 
ஆக்கியது அறிவோமே.
எழுஞாயிறு 
மாறன் எனில் 
நம் உயிர்ஞாயிறே
கலைஞர் ஆகும்.
மாறன் போற்றுதும் 
மாறன் போற்றுதும்
அந்த ஒலிக்கதிரின்
ஒளிக்கதிராய்
புது யுகம் பூத்த‌
கலைஞர் போற்றுதும்
கலைஞர் போற்றுதும்.
தமிழ்ச்சிலம்பின் 
பரல் எல்லாம்
கலைஞரும் மாறனும்
கல கலப்பாய்
களிப்பு ஊட்டியதும்
மறவோமே.
வாழ்க கலைஞர்
வாழ்க மாறன்
வாழ்க வாழ்கவே
நம் செந்தமிழே!

_________________________________________
சொற்கீரன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக