பயம்
__________________________________
டாக்டர் சொல்லிய அந்த வலி
முள் போல் தைக்கிறது.
நெஞ்சைப்பிசைகிறது.
இடது தோள் பட்டையில்
கடுமையான வலி.
ஒரு பாறாங்கல் என் மீது
அழுத்திக்கொண்டிருப்பது போல்..
சரி
அந்த மாயமான அற்புதமான
முட்டுச்ச்ந்துக்கு வந்து விட்டேன்.
இது ஆன்டீரியர் எம் ஐ யா?
லேடரல் எம் ஐ யா?
இல்லாவிட்டால்
இன்ஃபீரியர் எம் ஐ யா?
எம் ஐ எனும் மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன்
பாசக்கயிற்றை
என் கழுத்தை நோக்கி வீசுகிறது.
நான் எங்கே அந்த கடைசி நேர
கோல்டன் ஹவரின் தங்கநுனியை
பிடிக்கப்போகிறேன்.
கூக்கிள் புட்டு புட்டு வைத்தது என்ரு
எம் ஐ யின் சொல் விரிப்புகளில்
புரண்டு புரண்டு படித்தது
என் வலியின் கனபரிமாணத்தை
ராட்சக்குமிழியாய் ஊதிக்கொண்டே இருந்தது.
அதோ பேராபத்தின் பெரும் வலி
என் கண்ணாமுட்டைகளை
முன்னே முன்னே பிதுக்கிக்கொண்டிருக்கிறது.
ஆம்
இது அந்த வலி அல்ல.
அது இந்த வலி
இதோ பாருங்கள்!
ஆகச்சிறந்த
அரசியல் கணிப்பாளரான பத்திரிகையாள நடுவர்
துல்லியமாக சொல்லிவிட்டார்.
ஓட்டுகளின் இதய அறைகள்
துடிக்குமா? வெடிக்குமா?
நம் அரசியல் கோட்பாட்பாடுகள்
கோழித்தலை போல திருகப்படப்போகின்றன.
அந்த வேகாத மசோதக்கள் கூட
அரை குறையாய் பிணம் எரிந்த நிலையில்
நம் ஜனநாயகத்தை
வீதியில் எறியும் என்று
அடுத்த வருட காலண்டர் படக்காட்சிகள்
பிம்பம் காட்டுகின்றன.
ஆச்சரியம்!
அந்த நம்பிக்கை சாகவில்லை.
போய்த்தொலைகிறது.
இந்த இதயம்
எப்படியோ துடித்துக்கொண்டிருக்கட்டும்.
இ ஸி ஜி வரிகளில் துருத்திக்கொண்டு நிற்கும்
முகடுகளை
கோடிக்கணக்கான மக்களின்
நெஞ்சச்சீற்றங்களும் எழுச்சிகளும்
சமூகநீதியின் நியாயத்தராசு முள்
தைத்து நேர்ப் படுத்தி விடுவதாய்...
பயத்தின்
பிம்பங்கள் நொறுங்கிப்போகின்றன.
_______________________________________________18.08.2023
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக