செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

லட்டு

 லட்டு

____________________________________________

ருத்ரா


ஒரு முழு திருப்பதி லட்டு

சாப்பிட்டால் போதும்.

இந்த உலகத்தையே 

கருடன் வேடம் கொண்டு

சுற்றி வந்த சந்தோஷம் கிடைக்கும்.

செல்லமாய் என் மடியில் 

அந்த சர்க்கரை வியாதி எனும்

பொமரேனியனும் என்னை

கொஞ்சிக்கொண்டு தான் 

இருக்கிறது.

ராமானுஜப்பெருமகனார் எழுதிய‌

ஸ்ரீ பாஷ்யமும் 

அந்த பால்கடல் பரந்தாமனைப்பற்றி

வரி வரியாய் கவரி வீசுகிறது

யாருக்கு யாரை குளிர்விக்க?

இது இதுதான் என்று

விளங்கிக்கொள்ள 

பகவானுக்கு ஒரு மனிதன் 

தேவைப்பட்டான்.

அந்த இண்டு இடுக்கு இடைவெளியில்

இத்தனை நச்சு நிழல் "வர்ணங்கள்"

மனிதன் மீது

சவுக்கடிகளாய் விழ வைத்தது யார்?

ராமானுஜர் சொல்வதாக எனக்குத்தோன்றுகிறது.

"பத்து பத்தாய் 

கோடி அவதாரங்கள் அவர் எடுத்தாலும்

இந்த ஆதிக்க அசுரனை வீழ்த்த இயலாது.

அவர் பாட்டுக்கு சேமேன்னு 

பாற்கடலில் பாய்விரித்துக்கொண்டார்."

அவருக்கு அவர் சார்பாய்

இவர்களும் குறட்டை விடத்தொடங்கிவிட்டனர்.

சரி.

இருக்கட்டும்.

அந்த லட்டை பிய்த்து தின்னலாம்.


_____________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக