கவிதைகள்
________________________________________
ருத்ரா
அடித்து நொறுக்கிவிட்டார்கள்.
சல்லி சல்லியாய்.
ஆளுக்கொரு கையில்
பேனா என்ற பெயரில்
மாய மாயமாய்
தங்க மினு மினுப்புகளோடு
சம்மட்டிகள்.
சிதிலங்களை
பொறுக்கிவைத்துக்கொண்டு
அதற்குள்
நம்மையே
இந்த உலகத்தையே
தின்று முடித்து விடுகிற
வைரஸ்கள் இருப்பதும் அறியாமல்
பொறுக்கி வைத்துக்கொண்டு...
அதில்
என் முடைநாற்றங்கள்
முணு முணுத்துக்கிடப்பது தெரியாமல்
நானும்
பொறுக்கி வைத்துக்கொண்டு.....
_____________________________________________
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக