செவ்வாய், 1 ஜனவரி, 2019

அண்ணே...அண்ணே

அண்ணே...அண்ணே
===============================================ருத்ரா

"டேய் என்னடா இது? ஒடம்பெல்லாம் இட்லி இட்லியா வீங்கி இருக்கு."

"அய்யய்ய்யோ..அய்யய்யோ ..அந்த வார்த்தையையே சொல்லாதீங்கண்ணே.."

"என்னடா..இட்லி இட்லியா வீங்கி இருக்குன்னு சொன்னா இப்படி
அலறு அலறுன்னு அலறுதியே"

"அய்யோ மறுபடியும் அதே வார்த்தையையே சொல்றீங்களே".

"எந்த வார்த்தைடா ..அந்த இட்.."
(கப்பென்று இவர் வாயை அவர் பொத்திக்கொண்டு சொல்கிறார்)

"ஏண்ணே..அதே வார்த்தையையே சொல்லிக்கிட்டே இருக்கீங்க.."

"சரிடா..என்ன விசயம் சொல்லு?"

"அம்மா உணவகத்துக்கு..சாப்பிடப்போனேன்.அங்கே ஒரு ரூபாய்
இட்லி ரெண்டை வச்சு தட்ல குடுத்தாங்க."

"சரி..அப்புறம்.."

"அண்ணே..எனக்கும் அம்மா சாப்பிட்ட அந்த ஒரு கோடி ரூபாய் இட்லி ஒண்ணு வையுங்கண்ணேன்னு கேட்டேன்."

"சரிடா..அப்றம் என்னாச்சு?"

"அப்டியா தம்பி?  அது ஸ்பெஷல் இட்லி.உள்ளாற போய் வாங்கி
சாப்பிடுண்ணாங்க"

"அப்புறம்"

"நான் உள்ள போனேன்.உடனே நாலஞ்சு பேரு வந்து கும்மு கும்முனு உடல கும்மித்தள்ளிட்டாங்கண்ணே"

"அதான் இத்தனை இட்லியா உன் ஒடம்புலே புடைச்சிருக்கா ?"

"அய்யய்யோ...மறுபடியும் இட்லின்னு சொல்லாதீங்கண்ணே."

"என்னடா இது?
(திடீரென்று வடிவெலு பாணியில்)
சின்னப்புள்ள தனமாவுல்ல இருக்கு.இட்லர் ஆட்சியா நடக்கு?.இட்லின்னு சொல்லக்கூடாதுன்னு சொல்றதுக்கு"

அதற்குள் நாலைந்துபேர்கள் வந்து அந்த இருவரையும் கும்மு கும்மு
என்று கும்மி ஒரு ஆனந்தக்கும்மியே  பாடி ஆடிவிட்டுப் போய்
விட்டார்கள்

==================================================================
(இது ஒரு கற்பனைக்காமெடி அல்லது ஒரு காமெடிக்கற்பனை)










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக