மதம் (2)
==========================================================
ருத்ரா இ பரமசிவன்
உங்கள் உடம்பில்
பச்சை குத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் உடம்பில்
எதில் வேண்டுமானாலும்
பச்சை குத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் உடம்பில்
எங்கு வேண்டுமானாலும்
பச்சை குத்திக்கொள்ளுங்கள்.
கன்னிகுடம் உடைந்த ஈரம் கூட
காயாத நிலையிலும்
அந்த பிஞ்சுவின்
நாக்கை இழுத்துப்பிடித்து
பச்சைக்குத்திக்கொள்ளுங்கள்.
பெண்ணின் பூப்பு வாசத்திலும்
ஒரு பெரிய பூட்டு போட்டு
அதன் கனவு வர்ணத்தில் தார் பூசி
பச்சை குத்திக்கொள்ளுங்கள்.
ஏன் மனிதன் வரட்டியில் போய்
படுக்கும் போதும்
அவன் கபாலம் பிளந்து
மந்திரங்கள் ஓதி
பச்சை குத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் அழகு
எங்கள் அசிங்கம்.
அசிங்கத்தை
சமுதாயத்தின் மீது
பச்சைக்குத்திவிட
உங்களுக்கு துளியும் உரிமை இல்லை.
பச்சைப்பொய்களை
நிரந்தரமாக குத்திக்கொண்டால் அது
உண்மை ஆகாது.
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக