ஒரு அரிப்பு
=====================================================ருத்ரா.
ஒரு கவிதை எழுத ஆசை.
அதை எல்லோரும் படிக்க மிக மிக ஆசை.
ஆனால்
உலகத்தில் இதுவே தான்
எல்லா பேராசைகளையும் விடவும்
பெரிய பேராசை.
ஆமாய்ய்ய்யா ஆமா...
நீ எழுத்தால் துப்புவதற்கு
நாங்கள் பூச்செண்டு நீட்ட வேண்டுமா என்ன?
உன் தினவுகளும் அரிப்புகளும்
உன் சொற்களில் அரிதாரம் பூசிக்கொண்டு வரும்போது
நாங்கள் விசில் அடிக்க வேண்டுமா என்ன?
எங்கோ ஒரு மொட்டைவானத்தின்
மடிக்காம்புகளை பிதுக்கி
ஞானப்பால் பீய்ச்சுகிறேன்
என்று உன் மனப்பால் நிரப்பிய பேனாக்களின்
நிப்புகள் எங்களை பிறாண்டவேண்டுமா என்ன?
இல்லாவிட்டால்
அன்று உன் பூச்சிமயிர்ப்பருவத்து
மத்தாப்பு பிரகாசங்களையெல்லாம்
எங்கள் மீது வீசி
கண் கூச வைத்து எங்களோடு
நீ விளையாடிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?
பாவம் சங்கத்தமிழ்.
அந்த பட்டாம்பூச்சி சிறகுகளை பிய்த்தா
யாப்பிலக்கணம் போதிப்பது?
வேதத்தை கரைத்துக்குடித்து விட்டேன் என்று
அந்த விளக்கெண்ணெய் பாட்டில்களை
எங்கள் மீது
நீ அபிஷேகம் செய்து கோண்டிருக்க வேண்டுமா என்ன?
போதாதற்கு
அந்த நடிகனின்
இந்த நடிகையின்
அலட்டல்களையெல்லாம்
விண்குழல் வழியாய்
பீச்சி அடிக்க வேண்டுமா என்ன?
சினிமாப்பாட்டுகளைப்பற்றி
கேட்கவே வேண்டாம்.
காதலி ஐ லவ் யூ சொல்லிவிட்டால் போதும்
பாட்டு தூக்குற தூக்கலில்
கட்டம் போட்ட
கதாநாயகனின் "அண்டர் வேர்"
தூக்கி தூக்கி
வானமே கந்தலாய்
கிழிந்து தொங்கும்.
போதும்டா...சாமி...
அண்ணன் கவுண்டமணி மொழியில் சொல்வதானால்
அடேய்ங் கொப்பரை மண்டையா..
இவங்களெல்லாம் போகச்சொல்லு..
பேனா பேப்பர்களையெல்லாம் தூக்கிட்டு.
"வந்துட்டாங்க..
ஆளாளுக்கு "ஈயம் பூசுறவங்க மாதிரி"
ஒரு பைய தூக்கி கிட்டு."
====================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக