சுதந்திரம்
_________________________________________ருத்ரா இ பரமசிவன்
அசோகசக்கரம் கேட்டது
என்ன குறையென்று
அந்த வர்ணங்களை.
இந்தக்கொடித்துணி
கண்டவர் கைகளில்
தீட்டு பட்டு விட்டது.
கொஞ்சம் எங்கள் மீது
"கங்கா ஜலம் தெளி"
______________________________________
உலகமயப் பொருளாதாரம்
என்றால் என்ன?
பல்லாயிரம் கோடிகளை
முழுங்கியும் கூட
உலகம் சுற்றி வலம் வரலாம்!
______________________________________
இந்த "வறுமைக் கோட்டை"
என்ன செய்வது?
பேசாமல் பெயர் மாற்றி விடு
"லட்சுமணன் கோடு" என்று.
_________________________________________
சொற்பொழிவுகள்.
பீரங்கிக்குண்டுகள்.
அலங்கார வண்டிகள்.
ஏவு கணை ஊர்திகள்.
ம்ம்ம்ம்ம்
சீக்கிரம்! சீக்கிரம்!
போன ஆண்டு
மூடிவைத்திருக்கும்
துணியை எடுங்கள்.
தூசி தட்டுங்கள்.
இன்று ஆகஸ்டு பதினாலு!
_________________________________________
ஆகஸ்டுகள் வந்தன!
ஆகஸ்டுகள் போயின!
சுதந்திரம் எங்கள்
காலண்டர் குப்பைகள்.
________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக