ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
=================================================ருத்ரா
இளைய யுகமே!
காட்சி மாறி இருக்கிறது.
பாடல் தொனி மாறி இருக்கிறது.
என் குடியிருப்பிலே ஒரு கோப்பை
என்று
சொற்கள் இடம் மாறியிருக்கின்றன.
முதல் இரவு கட்டிலுக்கு
மலர் அலங்காரம் எல்லாம் அப்புறம்
முதலில் வீட்டுக்குள்
கோப்பை இருக்கவேண்டும்.
சுகாதாரம் வீட்டுக்குள் நுழைய வேண்டும்
லெட்சுமி வருவது தானே நிகழும்.
மணப்பெண்ணின்
கனவு சீனில் கூட
குதிரையோடு
வருகின்ற ராஜகுமாரர்கள்
குதிரையை விட்டு இறங்கி
குளக்கரையை நாசம் செய்ய
கிளம்பி விடக்கூடாது.
"மேரா நாம் ஜோக்கர்" என்று
ராஜ் கபூருக்குப் பிறகு
ஒரு ஜோக்கர் கிளம்பியிருக்கிறார்
"மன்னர் மன்னனாக".
குரு சோமசுந்தரமும் ராஜு முருகனும்
ஒரு செமையான கூட்டணி.
இங்கிலாந்தில்
ராணிக்கு
தங்கத்தில் கோப்பையாமே!
இந்தியாவிலோ
"எல்லாருமே இந்நாட்டு மன்னர்கள்"
எல்லாருமே
ஒரு பீங்கான் கோப்பையோடு தான்
அடுத்த தட்வை
வாக்களிக்க வேண்டும்.
நம்மிடையே தலை காட்டும்
இந்த "அராஜக நாற்றம்" மறைந்து
ஜனநாயகம் மணம் கமழட்டும்.
ஓட்டுகளை
கரன்சிகளாக
மலங்கழித்தை விட
ஓட்டுகளாகவே
மலர்ச்சியுறச்செய்ய வேண்டும்.
ஜோக்கர் திரைப்படம்
சொல்லும்
சொக்கத்தங்கமான கருத்தும்
இது தானே!
===============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக