ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

"ஓலைத்துடிப்புகள்"(2)



"ஓலைத்துடிப்புகள்"(2)
================================


தொண்டை சுற்றிய குவளை
===========================================ருத்ரா இ பரமசிவன்

நுண்சிறைத்தும்பி நுரைவிரித்தாங்கு
நுவலும் அதிர்வின் நரல் மொழி உய்த்து
கொண்டல் நாடன் கொழு நிழல் தழீஇ
தொண்டை சுற்றிய குவளையன்ன‌
தொடிநெகிழ் பசலை நோன்ற காலை
நோக்கும் நெடும் தேர் மணி இமிழோசை.



பொழிப்புரை
========================================

வண்டின் நுண்சிறகுகள் நுரை படர்ந்தாற்போல் அதிர‌
அதனுள் ஒலிக்கும் காதலனின் இன் சொல் உற்றுக்கேட்டு
மகிழ்கிறாள் காதலி.காதலன் நாட்டின் மழை மேகம் மறைக்கும்
அடர்ந்த நிழலில் அவன் நினைப்பில் தழுவிக்கிடக்கும் உணர்வை
அடைகிறாள்.தொண்டைக்கொடி சுற்றிய குவளை மலர் போல‌
அவன் தழுவலுக்கு ஏங்கி அவள் "தொடி" நெகிழும் வண்ணம்
பசலையுற்றாள்.அப்போது ஏக்கத்தோடு காதலனின் தேர் மணி ஒலிக்கும் ஓசையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.சங்க நடைக் கவிதையில் இது காதலின் எழில் பொங்கும் ஒரு காட்சி.

======================================================ருத்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக