வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

எனக்கு வலிக்கிறது







எனக்கு வலிக்கிறது
=============================================ருத்ரா

எனக்கு வலிக்கிறது.
ஆனால் அது என் வலி அல்ல.
என் கை கால் முறிந்தவலியின் போதும்
அது என் வலி அல்ல.
இந்த வலி
அதோ
அங்கே நாய் குதறிப்போட்ட‌
அந்த காக்கைக்குஞ்சின்
கடைசித்துளி
வலிச்சொட்டாக இருக்கலாம்.
அமைதியாய்
கிறு கிறுவென்று
பூவரச மரத்தின் மீதேறிக்கொண்டிருந்த‌
வளையல் பூச்சி
ஏதோ ஒரு பரு வண்டின்
கொடுக்குத்தட்டலில்
கீழே விழுந்து
சுருண்டு கிடக்கிறது.
அது மறுபடியும்
விரியல்லாம் அல்லது
விரியாமலேயே போகலாம்.
அதன் அரை மயக்க‌
வேதனை கூட‌
என் வலியில்
சிங்க்ரோனைஸ் ஆகியிருக்கலாம்.
அதோ ஒரு கிழவன் வருகிறான்.
முதுமையின் கூன்
அவனைச்சுருட்டிப்போட்டு விட்டநிலையிலும்
உடம்பில் பலத்த‌
காயங்களுடன் மரண வலிகளுடன்
வருகிறான்.
முடியாமல் கீழே விழுகிறான்.
அவன் முதலாளி
அவன் வேலை செய்யும்போது
அந்த வாளியை கீழே போட்டு
உடைக்காத குறையாய்
நெளிசல் ஆக்கி விட்டானாம்.
அதற்குத்தான் அந்த வலிகள்.
இது எனக்கு வலிக்கவில்லை.
எந்த வகையிலும்
என் சுண்டு விரலுக்கு கூட‌
வலிக்க வில்லை.
அது அவன் வலி.
அது
அவனும் அவன் சமுதாயமும் சார்ந்த‌
வலி.
மனிதன் வலிகளுக்கு
மனிதனே பொறுப்பு.
மரவட்டைகள் அல்ல.

======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக