திங்கள், 29 ஆகஸ்ட், 2016

ஒளிமரம் (2)




ஒளிமரம் (2)


மனத்துக்கண்.......
=========================================ருத்ரா இ பரமசிவன்.

மனத்துக்கண் மாசிலன்
ஆதல் அனைத்து அறன்..

உன் மனச்சிலேட்டை அழி !
கண்ணீர்க்  கடல்களை துடைத்து அழி.
அந்த எரிமலை லாவாக்களை
இனிக்கும்
லாலாக்கடை அல்வா வாக‌
மாற்றி எழுது.
அகர முதல..அகர முதல..
என்று
கீறல் விழுந்த ரிக்கார்டாய்
சுற்றிக்கொண்டே இருக்காதே.
அந்த 1330க்கும் மேலே போ!
வள்ளுவன் சொல்கிறானே
கேட்டதில்லையா?
"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு?"
வேதத்துக்கு அந்தம் என்று ஆணி அடித்து
வேதாந்தம் என்று விளிம்பு கட்டுவது
வேதம் இல்லை.
அறிவு என்பதே
இருட்டை உடைத்துக்கொண்டு
மேலே மேலே போ!
என்பதே பொருள்.
சூரியன் எப்போதும்
உன் முகத்தில்
தீயைக்கொபுளித்துக் கொண்டே
இருப்பதன்
மெய்ப்பொருளும் அஃதே!
உன் உறக்கம் உனக்கு மரணம்
ஆகி விடக்கூடாதே
என்ற அதிர்ச்சி மருத்துவமே அது.
அறிவு மட்டுமே
முற்றுப்புள்ளியே
இல்லாத ஒரு மொழி!
அதன் நிறுத்தற்குறிகளும்
கால் அரை முக்கால்புள்ளிகளும்
விஞ்ஞானம் உனக்கு
நட்டு வைத்த மைல்கற்கள்.
ஒரு "ஹப்பில் டெலஸ்கோப்" மூலம்
இந்த அண்டத்தையே
உன் சட்டைப்பைக்குள்
சொருகிக்கொள்ள வேண்டும் என்று
நினைக்கிறாய் அல்லவா?
அதுவே உன் "ஆதித்ய ஹ்ருதயம்"
ஒளியே உன் இருட்டு.
அது துடிக்கும்
துடிப்புகள் மூலம்
வெளிச்ச சுநாமிகள்
உன் சன்னல் கம்பிகளில் மோதும்.
விஞ்ஞானிகள்
இருட்டுப்பிண்டத்தையும்
இருட்டு ஆற்றலையும்
தொட்டே
(டார்க் மேட்டர் அன்ட் டார்க் எனர்ஜி)
இந்த பிரபஞ்சம்
சோப்புக்குமிழி ஊதி ஊதி
விளையாடுகிறது
என்று கண்டறிந்து விட்டார்கள்.
"ஏம்பா! எப்ப பார்த்தாலும்
சாமி சாமின்னுட்டு...?"
இந்த எதிர்மறை இருட்டிலிருந்து தான்
உன் கோடிக்கண் பிரகாசம்
இமைககள் விலக்கப்போகின்றன!
மனக்கவலை மாற்றலரிது தான்,
அதனால்
மனக்கவலைகள் தாண்டி விடு.
மரணம் எனும் "அனாட்டமி" பற்றி
முதலில் படி.
தூங்குகையில் வாங்குகிற மூச்சு
சுழி மாறி போனாலும் போச்சு.
ஆம்..
அந்த சுழி
மனிதனின் அறிவில் இருக்கிறது.
மரணத்தை வெல்லும்
முதல் மனிதன்
பிறக்கும் போதே
ஜனன மரணக்கணக்குகளின்
காலம் முடிந்து விடும்.
குவாண்டம் நுரைக்கோட்பாடு
காலப்பரிமாணத்தை
கழற்றி எறியப்போகிறது.
குவாண்டம் டெலிபோர்டேஷனில்
மனிதன் ஒளிர்துகள்
எனும் ஃபோட்டானாய்
பற்பல பிரபஞ்சங்களில்
தட்டு தட்டுகளாய்
(ப்ரேன் காஸ்மாலஜி)
பாண்டி விளையாடப்பொகிறான்.
வெறும் கற்பனைக்கடவுள் எல்லாம்
இனி இல்லை...விஞ்ஞானக்
கற்பனையே நம் கடவுள்.

============================================================


.










































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக