செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

முகங்களின் காடுகள்







முகங்களின் காடுகள்

======================================ருத்ரா இ பரமசிவன்


மக்கள் தொகைப்பெருக்கம் பற்றி
"மால்தூசியன்" கோட்பாடு
அச்சமூட்டியது அதிகம்.
ஆறுதல் சொன்னது குறைவு.
நாம் பெருகியது
"பெருக்கல்"கணக்கு
அதாவது ஜியாமெட்ரிக் ப்ரோகிரஷன்.
நமது பொருட்கள் பெருகியதோ
கூட்டல் கணக்காம்.
அதாவது அரித்மெடிக் ப்ரோகிரஷன்.
அதானல் நமக்கு
சிவப்பு முக்கோணமே
கிருஷ்ணன் காட்டியதை விடவும்
ஒரு பெரிய விஸ்வரூபம்.
பொருளாதார தாராளமயம் என்பதற்கு
மக்கள் தொகை பெருகி
சந்தை ஈசல்கள் மொய்க்கவேண்டும்.
ஆனால்
முரண்பாடுகளே
நமது பசி.
மீண்டும் முரண்பாடுகளே
நமது உணவு.
அண்ணன் என்னடா?
தங்கை என்னடா?
அவசரமான உலகிலே என்று
ஒரு கூடு இரு பறவை போதும்...என
குஞ்சுகள் கூட‌
டிஜிட்டல் பொம்மைகளாகின.
ஸ்மார்ட் செல்லில்
எல்லாம் அடக்கி
இன்பம் மட்டும் வழிந்தால் போதும்
என்று
"ஆன் லைனில்"
அத்தனையும் சுருங்கிப்போனது.
பெண்ணும் ஆணும் வெறும்
பண்ட மாற்றம்.
ஆன் லைனில்
மனிதன் மீண்டும்
நீண்டதோர் குகைக்குள்
கும்மிப்போனான்.
பணத்தின் வெள்ளம் மட்டும்
சிலரின் கையில்.
மனிதம் என்றொரு
மகத்தான உலகம்
டெக்ஸ்டிங் மற்றும்
கேமிராக்கண்ணுள்
சுருங்கி சுருங்கி
மரவட்டை ஆனது.
கை பேசி
சிப்பிக்குள்ளே
ஏழுகடலும்
படுக்கை போட்டு
சுருண்டு கொண்டது.
வானங்கள் யாவும்
லைக்குகள் எனும்
நாக்குப்பூச்சிகள்
நானூறு கோடியின்
அலப்பறைக்குள்
அடங்கின ஆர்த்தன!
முகங்களின் காடுகள்
நிரம்பி வழிந்தன.
நிமிடங்கள் செகண்டுகள்
காசுக்கடலில்
அமிழ்ந்து கிடந்து
அலைகள் விரித்தன.
சுகமாய் ஒரு தென்றல் கீற்றின்
சுவர்க்கம் போலொரு
மனித உள்ளம்
மறைந்து போனது
முகவரி இன்றி.
"இறந்த அஞ்சல் அலுவலகம்"
(டி.எல்.ஓ) உள்ளே
எத்தனை எத்தனை
இதயங்கள்
துடித்து துடித்துக்
கிடந்திடுமோ?
யாரே அறிவார்!
அறியோம் நாம்!

==================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக