வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஒரு தங்கம்.



ஒரு தங்கம்.
======================================ருத்ரா இ பரமசிவன் .

மகப்பேறு மருத்தவ மனை
பரமசிவன்மு கவாயைத்தேய்க்கின்றேன்.
தலை மயிரை சிலுப்புகின்றேன்.
கடைவாய் வழியே கோழை வடிய‌
மூக்குச்சிந்தாத குறையாய்
முட்டுகின்றேன் மோதுகின்றேன்.
அது சரி?
வலி உன் மனைவிக்குத்தானே!
அந்த வலியையா
இப்படிப்படம் பிடிக்கிறாய்!
உண்மையிலேயே எங்களுக்கும் கூட‌
அடி வயிறு கலங்குகிறது!
அத்தனை வலி! அத்தனைத்துடிப்பு!
பிரசவத்திற்கு முன் என் மனைவி
காதில் கிசு கிசுத்துப்போய்விட்டாள்.
குழந்தை பிறந்தவுடனேயே
நாம் குழந்தைக்கு பெயர்
வைத்துவிட வேண்டும்.
விலை மதிப்பற்ற அந்த பெயரைத்தாங்கி
நம் குழந்தை
அந்த துணி விரிப்பில்
குவா குவா என்று
கிடந்தாலும் அந்தப்பெயரில்
காணக்கிடைக்காத தங்கமாய்
சுடரவேண்டும்.
இதுவே அவள் ஆசை!
என்ன செய்வேன்?
செவியலிய வெள்ளைத்தேவதைகள்
இன்னும் சில விநாடிகளில்
அந்த பிஞ்சுப்பிரபஞ்சத்தை
கையில் ஏந்தி வருவார்களே!
வலி கணத்துக்கு கணம்
அதிகரிக்கலாயிற்று.
ஆயிரக்கணக்கான தேள்களின்
கிடங்கில்
விழுந்தாற்போல
கொட்டு கொட்டு என்று
கொட்டித்தீர்க்கும்
வலிகளின் பிரளயம் அது!
படீரென்று
பளிங்கு உடைந்து சிதறினாற்போல ஒலி.
ஆம்.
குழந்தை பிறந்து விட்டது?
மகிழ்ச்சியின் சிகரம் சென்றுவிட்டேன்.
திடீரென்று கீழே தள்ளிவிட்டாற்போன்ற பிரமை.
என்ன பெயர் சொல்லிக்கொண்டு
உள்ளே நுழைவது?
குழப்பம் தாளவில்லை.
காணக்கிடைக்காத தங்கமாய்
பிறந்து விட்டான் அல்லது விட்டாள்!
எதுவாய் இருந்தாலும் ஓடுகிறேன்.
தங்கமே என்று
பெயர் சூட்டிக்கொண்டு
ஓடுகிறேன்.
பெயர் பத்தம்பசலியாக அல்லவா இருக்கிறது!
புதுமையாக‌
நம் புதிய கனவாக‌
நம் புதிய ஏக்கமாக‌
நம் லட்சியமாக அல்லவா இருக்கவேண்டும்.
............
..........
"தங்கமே...."
"மாணிக்கமே..."
இல்லை இல்லை...எங்கள்

"ஒலிம்பிக் தங்கமே"

சுடர்மிகுந்த ஒரு பாரதக்கனவை
பெயர் சூட்டிய‌
வலுவோடு உள்ளே ஓடுகிறேன்.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக