வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

போன்ஸாய்



























போன்ஸாய்
====================================ருத்ரா இ பரமசிவன்

காக்கா போட்ட விதையில்
ஆலமரம் ஆக்கிரமித்து
விதைக்குள்ளே வீடே போனது.

அவள் சொன்ன "ஹாய்"

அவள் கைக்குட்டை வீசினாள்.
எதற்கும் இருக்கட்டும்
நாளை நான் கண்ணீர்க்கடலில்
கிடக்கலாம் என்று.

மொட்டை மாடி.
பிழியப்பட்டு கிடந்தது
வடாம் இல்லை.
அவள் நினைவில்
நான்.

நெருநல் உளன் ஒருவன்
இன்றில்லை.
ஆம்
நான் காதலிக்கத்துவங்கி விட்டேன்.

ஒரு சிவப்பு ரோஜாவுக்கு
அவள் கை நீட்டினாள்
ஒரு ரூபாய்க்கு
பூக்காரியிடம்.
காதல்
என்ன அவ்வளவு கொள்ளை மலிவா?


சலவைக்கல் பளபளக்கவில்லை
தாஜ்மகாலுக்கு.
இதுவரை
காதலிக்கும்
கோடி கோடி பேர்கள்
நினைத்து நினைத்து
பாலீஷ் போட்டதே அது.


வகுப்பில்
ஸ்க்ரோடிங்கர் ஈகுவேஷனாம்.
ஹெய்சன்பர்க மேட்ரிக்ஸ் மெகானிக்ஸாம்.
யாருக்கு வேண்டும் இதெல்லாம்?
குவாண்டம் ஃபிஸிக்ஸ்
முன் வரிசை பெஞ்சில்.
பின் பெஞ்சுகளில்
நாங்கள்
காதலின் மின்னல் குமிழிகள்.

புற்று வருமாமே!
காதலின் வால்மீகி நான்.
வில்லும் அம்பும் காதலே.
சிகரெட்டில் தவம்.
காதலே அந்த‌
புகை வளையங்கள்.

===========================================ருத்ரா
எழுதியது:‍‍ 19 அக்டோபர் 2013.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக